நுண்வட்டு
நுண்வட்டு (MiniDisc) என்பது காந்தவொளியியல் சேமிப்புச் சாதனமாகும்.[1] சாதாரண நுண்வட்டில் 80 நிமிடங்கள் நீளமான ஒலிதக் கோப்பைப் பதிவு செய்ய முடியும்.
ஊடக வகை | காந்தவொளியியல் வட்டு |
---|---|
கொள்திறன் | 80 நிமிடங்கள் (சாதாரண நுண்வட்டு), 45 மணித்தியாலங்கள் வரையிலான ஒலிதம் (ஒரு ஜிகாபைற்றுக் கொள்ளளவு) |
வாசித்தல் தொழிநுட்பம் | 780 நனோமீற்றர் சீரொளி |
பதிவுத் தொழிநுட்பம் | காந்தப் புலப் பண்பேற்றம் |
கண்டுபிடித்தவர் | சோனி |
பயன்பாடு | ஒலிதச் சேமிப்பு, தரவுச் சேமிப்பு |
நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு நவம்பரில் சப்பானிலும் திசம்பரில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு விடப்பட்டது.
வடிவமைப்பு
தொகுநுண்வட்டானது மில்லிமீற்றர் அளவிலான பொதியுறையில் வைக்கப்படுகின்றது.[2] இது 3.5 அங்குல நெகிழ் வட்டின் உறைப் பெட்டியை ஒத்தது. அத்தோடு, நுண்வட்டானது தரவுகளைச் சேமித்து வைக்கதற்கு மீள எழுதக்கூடிய காந்தவொளியியல் தேக்ககத்தைப் பயன்படுத்துகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ["நுண்வட்டு அறிக்கை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31. நுண்வட்டு அறிக்கை (ஆங்கில மொழியில்)]
- ↑ நுண்வட்டுக் கைந்நூல் (ஆங்கில மொழியில்)