நுபுர் மேத்தா

இந்திய நடிகை

நுபுர் மேத்தா ஒரு இந்தியத் திரைப்பட மற்றும் விளம்பர நடிகை. இவர் இந்தியில் வெளியான ஜோ போலே ஸோ நிஹா திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1] நுபுர், பேன்டா குளிர்பானம், பைரேலி போன்ற விளம்பரங்களிலும் பியாட் வகை காருடைய நாள்காட்டி விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்வியர் என்னும் நாளிதழின் 2001-ம் ஆண்டின், சூன் மாத இதழின் அட்டைப்பக்கத்தில் இவருடைய புகைப்படம் வெளிவந்தது.[2] கடந்த ஆண்டு (2011), இந்தியாஸ் பர்ஸ்ட் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வெர்சன்ஸ் (India’s first Mills & Boons versions) என்ற புத்தகத்தின் அட்டைப் பக்கத்திலும் இவருடைய புகைப்படம் வெளிவந்தது.[3][4]

நுபுர் மேத்தா
பணிதிரைப்பட நடிகை, விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005

கிரிக்கெட் சூதாட்ட பிணக்கு தொகு

தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்திற்கானத் துடுப்பாட்ட போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சூதாட்டம் செய்யப்பட்டதாகவும், அதில் இந்தி திரைப்பட நடிகை ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அந்நடிகையின் புகைப்படம் சற்று மங்கலாக வெளியிடப்பட்டிருந்தது. அது நுபுர் மேத்தாவின் தோற்றத்துடன் ஒத்துப்போகின்றது. ஆயினும், நுபுர் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.[5] இது குறித்து, அந்நாளிதழுக்கு எதிராக நுபுர் வழக்கு தொடுக்க உள்ளார்.[6]. இப்பிணக்குகளுக்குப் பின்னர், நுபுர் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் தோன்ற அழைப்பு விடப்பட்டுள்ளது. சூன் 11, 2012-ல், நுபுரிடம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சூதாட்ட தடுப்புக்குழு மும்பையில் விசாரணை செய்தது [7]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "Jo Bole So Nihaal". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  2. "Nupur Mehta [Biography] Bollywood Actress". Matpal. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  3. "Who is Nupur Mehta?". First Post Bollywood. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  4. "Smalltime Bollywood actor Nupur Mehta involved in cricket match-fixing?". India Today Bollywood. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  5. "Bollywood starlet Nupur Mehta denies role in fixing scam". Hindustan Times. Archived from the original on 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  6. "Nupur Mehta to sue British paper over matchfixing story". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.
  7. "ICC questions starlet over spot-fixing row". 12 June 2012. http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/ICC-questions-starlet-over-spot-fixing-row/articleshow/14034758.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுபுர்_மேத்தா&oldid=3560964" இலிருந்து மீள்விக்கப்பட்டது