நூதன் வித்யாலயா கல்விச் சங்கம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சங்கம்

நூதன் வித்யாலயா கல்விச் சங்கம் (Nutan Vidyalaya Education Society) இந்தியாவின் கருநாடக மாநிலம் குல்பர்காவை தளமாகக் கொண்ட ஒரு கல்விச் சங்கமாகும். 1907 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சங்கம் தற்போது 12 நிறுவனங்களை நடத்துகிறது. 1857 ஆம் ஆண்டில் பம்பாய்-மெட்ராசு இரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை குல்பர்கா வழியாக சென்றது. இதனால் நகர இளைஞர்கள் பம்பாய் மற்றும் புனேவில் உயர்கல்வி கற்க இரயில்வே வசதியைப் பயன்படுத்த முடிந்தது. குல்பர்காவிலுள்ள வழக்கறிஞர் விட்டல்ராவ் தியுல்கோங்கர், குல்பர்காவிற்கு சொந்தமாக ஒரு உயர்கல்வி நிறுவனம் இருக்க வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்தார். [1] நூதன் வித்யாலயா 7 மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர் பாபுச்சி கோவிந்த் சாத்தே ஆகியோருடன் ஒரே அறையில் தொடங்கப்பட்டது. [2] சங்கத்தால் நிறுவப்பட்ட முதல் பள்ளி மராத்தி மொழியிலும், பிராந்தியத்தில் கற்பிக்கும் ஊடகம் உருது மொழியாகவும் இருந்தது. [3] நூதன் வித்யாலயா கல்விச் சங்கம் ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் கீழ் மக்களிடையே தேசிய உணர்வுகளைத் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. நிசாம் அரசாங்கத்தின் கீழ் பள்ளி பல சிரமங்களையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. நூதன் வித்யாலயா கல்விச் சங்கத்த்தின் முயற்சியைக் கைவிட நிசாம் அரசாங்கம் முயற்சித்தது. [2] சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். [1] மகாத்மா காந்தி 1927 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சங்கத்திற்கு வருகை தந்தார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Hyderabad-Karnataka region’s very own ‘Jnanagang". Indian Express. 15 May 2012 இம் மூலத்தில் இருந்து 12 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131112011118/http://newindianexpress.com/cities/bangalore/article138033.ece. பார்த்த நாள்: 30 October 2013. 
  2. 2.0 2.1 "Place of patriotism". 27 Dec 2003 இம் மூலத்தில் இருந்து 24 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050124035756/http://www.hindu.com/yw/2003/12/27/stories/2003122701410300.htm. பார்த்த நாள்: 6 November 2013. 
  3. 3.0 3.1 "Colourful start to centenary celebrations of Nutan Vidyalaya". The Hindu. 18 Jan 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/colourful-start-to-centenary-celebrations-of-nutan-vidyalaya/article1784190.ece. பார்த்த நாள்: 6 November 2013.