நூருல் இசுலாம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

நூருல் இசுலாம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகில் குமாரகோவில் என்னும் இடத்தில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 ல் தக்கலைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்திருக்கும் குமாரகோவில் சந்திப்பிலிருந்து சுமார் 1.5 கட்டை (கிலோ மீட்டர்) தூரம் சென்றால் இப்பல்கலைக்கழகத்தை அடையலாம். கன்னியாகுமரியிலிருந்து 30 கட்டைத் தூரத்திலும் திருவனந்தபுரத்திலிருந்து 60 கட்டைத்தூரத்திலும் அமைந்துள்ளது. நூருல் இசுலாம் பொறியியல் கல்லூரியாக செயல்பட்டு வந்த இக்கல்லூரி 8, டிசம்பர், 2008 முதல் நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை நூருல் இசுலாம் உயர்கல்வி என்ற அமைப்பு நடத்தி வருகின்றது. இதன் தலைவராக முனைவர். மஜீத்கான் என்பவர் செயல்பட்டுவருகின்றார்.

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்தொகு

http://www.niceindia.com/nice/
http://www.niuniv.com/