நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (NICAS) 2001 ஆம் ஆண்டில் நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டதாகும், திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அப்பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் தமிழக அரசின் உயர்கல்வி இயக்ககத்தால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த கல்லூரி கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறது. பணிகளைச் செய்து வருகிறது. [1]

நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒரு தோற்றம்
வகைகலை அறிவியல்
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் இரா.மாரிமுத்து எம்.காம்., எம்.பில்., பி.எச்.டி., எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம் மற்றும் ஐ.ஆர்
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://nicollege.com//

1600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரியில் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை ஏற்படுத்துவதையும் அதன்வழி அந்த பகுதி கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க சேவைபுரிவதே இக்கல்லூரியின் தொலைநோக்கு திட்டம் மற்றும் நோக்கமாகும். [2]


இக்கல்லூரியை நடத்திவரும் நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளை ஜனாப் டாக்டர் ஏ. பி. மஜீத் கான் அவர்களால் கேரள மாநிலத்தில் 1955 ஆம் ஆண்டில் முதல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியதன் வழியே, இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள கல்வியில் பின்தங்கிய கிராமப்புற மக்களை உயர்த்தும் நோக்கத்துடன் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களை நடத்தி கல்விச்சேவை புரிந்து வருகின்றது. [3]

  • நூருல் இஸ்லாம் பொறியியல் நிறுவனம், அமரவிலா, கேரளா
  • நூருல் இஸ்லாம் பல்தொழில்நுட்பக் கல்லூரி, திருவிதாங்கோடு, தமிழ்நாடு
  • நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி, குமாரகோயில் (NICE), தமிழ்நாடு
  • நூருல் இஸ்லாம் சமுதாயக் கல்லூரி, குமாரகோயில், தமிழ்நாடு
  • நூருல் இஸ்லாம் கலை, அறிவியல் கல்லூரி, குமாரகோயில், தமிழ்நாடு
  • நூருல் இஸ்லாம் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் மையம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
  • நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் (NIMS) , தாதிகள் கல்லூரி மற்றும் ஆய்வு அடிப்படை நிறுவனம், நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நூருல் இஸ்லாம் பல் மருத்துவக் கல்லூரியும் உயர் சிறப்புப் பல் மருத்துவ மனை, நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நூருல் இஸ்லாம் வணிக மேலாண்மைக்கும் கணினிப் பயன்பாட்டுக்குமான பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
  • நூருல் இஸ்லாம் வானூர்தியியல், கடற் பொறியியற் கல்லூரி, (கன்னியாகுமரி மாவட்டம்), தமிழ்நாடு.
  • நூருல் இஸ்லாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (முனைவர் பட்டத் திட்டங்கள்), கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
  • நூருல் இஸ்லாம் ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் மையம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
  • நிம்ஸ் ஹார்ட் பவுண்டேஷன், நிம்ஸ் மெடிசிட்டி, நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நிம்ஸ் நர்சிங் கல்லூரி, நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நிம்ஸ் சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு பயோடெக்னாலஜி, நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நிம்ஸ் ஸ்பெக்ட்ரம் குழந்தைகள் வளர்ச்சி ஆராய்ச்சி மையம், கேரளா.
  • நூருல் இஸ்லாம் சிவில் சர்வீஸ் அகாடமி, நெய்யாற்றின்கரை, கேரளா.
  • நூரு இஸ்லாம் உயர்கல்வி மையம், குமாரகோவில்,தக்கலை, தமிழ்நாடு.


பாடநெறிகளின் பட்டியல் தொகு

இளநிலைப் பட்டப் பாடநெறிகள் B.A. ஆங்கிலம்
B.Sc. உயிரித்தகவலியல்
B.Sc. உயிரித் தொழில்நுட்பம் பட்ட மேற்படிப்புக்கான பாடநெறிகள்
B.Sc. நுண்ணுயிரியல் M.Sc. உயிரித்தகவலியல்
B.Sc. உயிர்வேதியியல் M.Sc. உயிரித் தொழில்நுட்பம்
B.Sc. கணினி அறிவியல் M.Sc. கணினி அறிவியல்
B.Sc. தகவல் தொழில்நுட்பம் M.A. ஆங்கிலம்
B.C.A. (கணினிப் பயன்பாடுகள்) M.A. தமிழ்
B.Sc. காட்சித் தொடர்பியல் M.Com. (வணிகவியல்)
B.B.A. (வணிக நிர்வாகம்)
B.Com. உடன் கணினிப் பயன்பாடு முனைவர் பட்டப் பாடநெறிகள்
B.Com. (வணிகம்) Ph.D. நுண்ணுயிரியல்
B.Sc. கணிதம்

வழக்கமான படிப்புகள் தவிர, கல்லூரி பல்வேறு துறைகளில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. [4]

அத்தோடு சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொலைதூரக்கல்வி சான்றிதழ் படிப்புகளும் வழங்கி வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "இணைப்புக் கல்லூரிகள்".
  2. "குமாரகோவில்-கல்லூரியில்-கருத்தரங்கம்".
  3. "என்ஐ கல்வி அறக்கட்டளை".
  4. "இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகள்".

வெளிப்புற இணைப்புகள் தொகு