நூலகவியல் (சிற்றிதழ்)
நூலகவியல் ஐக்கிய இராச்சியத்தின் லூட்டன் எனுமிடத்திலிருந்து 2005 இல் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். அதன் முதலிதழ் 1985ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளிவந்தது.
பணிக்கூற்று
தொகு- வாசிப்பை நேசிப்போம்.
நிர்வாகம்
தொகுபிரதம ஆசிரியர்
தொகு- என். செல்வராஜா
இவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகின்றார். இவர் இலங்கையில் பிரபல நூலகவியலாளர்களுள் ஒருவராக இருந்தவர். நூல்தேட்டம் எனும் பெயரில் இதுவரை 07 தொகுதிகளில் 7000 இலங்கைத் தமிழ் நூல்களை பதிவாக்கியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்
தொகு- திருமதி கல்பனா சந்திரசேகர்
வெளியீடு
தொகு- அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம்
தனிப்பிரதி
தொகு- 100 ரூபாய்
சிறப்பு
தொகுநூலகவியல் 1985ம் ஆண்டில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கிடையிலும் தமிழ் நூலகங்களுக்கிடையேயும் ஒரு உறவு பாலத்தை 1991 வரை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையிலிருந்து வெளிவந்த போது ஆசிரியர்
தொகு- என். செல்வராஜா
இலங்கையிலிருந்து வெளிவந்த போது ஆசிரியர்குழு
தொகு- சி. யோகவேல்
- (அமரர்) கலாநிதி ஜே. இ. பாக்கியவான்
- கலாநிதி இ. பாலசுந்தரம்
- திருமதி ரூபா நடராஜா
- திருமதி ரோ. பரராஜசிங்கம்
- எஸ். எல். கமால்தீன்
- சே. கிருஸ்ணராஜா
இதன் ஆசிரியர் என்.செல்வராஜா புலம்பெயர்ந்து 1991ம் ஆண்டில் லண்டனுக்கு செல்லும்வரை தொடர்ச்சியாக ஏழாண்டுகள் வெளிவந்துள்ளது. மீண்டும் 2005 முதல் புதுப்பொழிவுடன் லண்டனிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது.
உள்ளடக்கம்
தொகுநூலகவியல் சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் இது தாங்கி வெளி வந்துள்ளது.