ஆனைக்கோட்டை
ஆனைக்கோட்டை[1] என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் மானிப்பாய், நவாலி, தாவடி, வண்ணார்பண்ணை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
வரலாற்று முக்கியத்துவம்
தொகுஇது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு மையம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை, உரோம மட்கலன்கள், லட்சுமி நாணயம் ஆகியவையைக் கொள்ளலாம். இவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகின்றன.
ஆலயங்கள்
தொகு- ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோயில்
- ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதி விநாயகர் கோயில்[4]
- ஆனைக்கோட்டை உயரப்புலம் உத்துங்க விநாயகர் ஆலயம்
- ஆனைக்கோட்டை சாவற்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயம்[5]
- ஆனைக்கோட்டை சாவற்கட்டு கெங்காதேவி அம்மன் ஆலயம்
- ஆனைக்கோட்டை வரதவிக்ன விநாயகர் (சம்பந்தப் பிள்ளையார்) ஆலயம்
- ஆனைக்கோட்டை உயரப்புலம் ஆலடி ஞானவைரவர் ஆலயம்
- ஆனைக்கோட்டை புளியங்கண்டுப் பிள்ளையார் கோவில்[6]
- ஆனைக்கோட்டை கண்ணகி அம்மன் ஆலயம்
- ஆனைக்கோட்டை காசிகாண்ட விஸ்வநாதர் ஆலயம் (ஆனைக்கோட்டை சிவன் கோயில்)
- ஆனைக்கோட்டை உயரப்புலம் வராகி அம்பாள் ஆலயம்
- ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயம்
- ஆனைக்கோட்டை பெத்தானியா திருச்சபை
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த புகழ் பெற்றவர்கள்
தொகு- எஸ். அகஸ்தியர், எழுத்தாளர்
- ந. செல்வராஜா, நூலகர்
- வி. கனகலிங்கம், ஓவியர்
- ரி. ராஜகோபால், வானொலி, மேடை நடிகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aanai-vizhunthaan-ku’lam, Aliyaa-wætuna-wæwa". TamilNet. April 5, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36197.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "Karaiyoor, Karaawe-goda". TamilNet. June 4, 2014. https://tamilnet.com/art.html?catid=98&artid=37248.
- ↑ "Kaṭṭu-muṟivu/Kaṭṭu-muṟivuk-kuḷam, Pūpālak-kaṭṭu, Maṟicca-kaṭṭu/Maṟiccuk-kaṭṭi, Uṭaiyār-kaṭṭu/Uṭaiyār-kaṭṭuk-kuḷam, Veḷḷāḷak-kaṭṭu, Cāvaṟ-kaṭṭu". TamilNet. July 13, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22710.
- ↑ "Aalang-ka'ndu, Cheathupathiyaar-ka'ndu". TamilNet. January 16, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37600.