நெகுபெயி
நெகுபெயி என்பவர் சகதாயி கானரசின் கானாவார். இவரது தந்தை பெயர் சர்பன்.
நெகுபெயி | |
---|---|
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1271–127? |
முன்னையவர் | கியாசுதீன் பரக் |
பின்னையவர் | புகா தெமூர் |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 127? |
மதம் | சன்னி இசுலாம் |
1271ஆம் ஆண்டு சகதாயி கானரசின் கானாக நெகுபெயியைக் கய்டு நியமனம் செய்தார். எனினும், அரியணைக்கு வந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு தன்னுடைய எஜமானருக்கு எதிராக நெகுபெயி கிளர்ச்சி செய்தார். அல்கு மற்றும் பரக்கின் மகன்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சிகளுடன் இணைந்து இவர் இவ்வாறு நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்குப் பதிலாக நெகுபெயிக்கு எதிராகக் கய்டு ஒரு இராணுவத்தை அனுப்பினார். இதன் காரணமாக, நெகுபெயி கிழக்கு நோக்கித் தப்பி ஓடும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். சீக்கிரமே கொல்லப்பட்டார். இறுதியாக, சகதாயி கானரசின் கானாகப் புகா தெமூர் ஆட்சிக்கு வந்தார்.