நெடிலடி
நெடிலடி என்பது ஐந்து சீர்களால் அமைந்த அடி. சீர் எண்ணிக்கையைக் கருதி ஐந்து சீரடி நெடிலடி எனப்படுகின்றது. அதாவது இயல்பான அடியாகிய நான்குசீர் அடியாகிய அளவடியின் ஓர் சீர் மிகுந்து வருவது நெடிலடியாகும்.
“ | குறிலே நெடிலே குறிலிணை ஏனைக்
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும்
றறிவேய் புரையும் மென்றோளி உதாரணம்
வெறியே சுறாநிறம் விண்டோய்
|
” |
இக் கட்டளைக் கலித்துறை எனும் செய்யுளில் உள்ள நான்கு அடிகளும் ஐந்து சீர்களும் உள்ள நெடிலடிகளாகும்.
“ | "வென்றான் வினையின் தொகைநீங்க விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் னொழியாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த் தியாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்"[2] |
” |
இது கலித்துறைப்பாடல். நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்களால் நிரம்பியுள்ளது. எனவே, நெடிலடி நான்கிளைக் கொண்டு வந்துள்ள பாடல் இந்தக் கலித்துறை. இதன் முதலடியை மட்டும் கொண்டு ஐந்து சீர்களைக் கொண்ட இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. ஆதலால், நான்கு தளைகளால் அமைவது நெடிலடி என்று கூறலாம். யாப்பிலக்கணமும் ‘நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கின்றது[3]