நெடுசாலை நடராஜ சுவாமி கோயில்
நெடுசாலை நடராஜ சுவாமி கோயில் அல்லது நடனசாலை நடராஜ சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுசாலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்க்கோயில் உள்ள ஊரின் பெயரான நெடுசாலை என்பது நடனசாலை என்பதின் திரிபாக கருதப்படுகிறது.
நடராஜ சுவாமி கோவில் | |
---|---|
நெடுசாலை நடராஜ சுவாமி கோயில் இராசகோபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | நெடுசாலை, கிருஷ்ணகிரி வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | நடராஜ சுவாமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
உற்சவர்: | நடராசர் |
உற்சவர் தாயார்: | சிவகாமி |
கோயில் அமைப்பு
தொகுகோயிலானது மார்கண்டேய நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரில் மார்கண்டேய நதி பாய்கிறது. மிகப்பழமையான இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் ஐந்து நிலை இராசகோபுரத்துடன் உள்ளது. இராச கோபுரத்தையடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்ற அமைப்புகளோடு அமைதியான அழகான கோயிலாக இது விளங்குகிறது. கோயில் கருவறையில் அழகான பெரிய லிங்க மூலவர் உள்ளார். கோயிலில் லிங்காயத்து முறைப்படி பூசைகள் நடக்கின்றன.
அமைவிடம்
தொகுகிருஷ்ணகிரி, ஒசூர் சாலையில் உள்ள குருபரபள்ளியில் இருந்து தீர்த்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் நெடுசாலை என்ற கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "நடனசாலை#சிவன்/நடராஜசுவாமி". அறிமுகம். நவபழனிக்கோ அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2018.[தொடர்பிழந்த இணைப்பு]