நெடும்பார தாயனார்

நெடும்பார தாயனார் ஒரு பார்ப்பன முனிவர். இவர் நெடும்பாரம் (பாரம்) என்னும் ஊரினர். சேர அரசன் மூன்றாம் பதிற்றுப்பத்துத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலை வழிநடத்திச் சென்று இருவருமாகத் தவம் மேற்கொண்டனர்.[1]

பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[2]

பனம்பாரம் (பாரம்) என்னும் ஊரினர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. பதிற்றுப்பத்து – மூன்றாம்பத்து பதிகம்.
  2. அகநானூறு 152
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடும்பார_தாயனார்&oldid=3399225" இலிருந்து மீள்விக்கப்பட்டது