நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டம்

நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டம் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் எனும் சிற்றூரில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக இந்திய அரசு வகுத்துள்ள திட்டமாகும்.[1] இந்தியாவின் பல்வேறுபகுதிகளில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களை இந்திய அரசு தேர்வு செய்தது. அந்த 31 இடங்களில் ஒன்று நெடுவாசல் ஆகும்.[2]

திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்தொகு

  • பிப்ரவரி 21, 2017 - ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பட்ட இடத்தை ஓஎன்ஜிசியில் பணிபுரியும் முதன்மை அதிகாரி பார்வையிட வந்தபோது, அவர் பயணித்த மகிழுந்தை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். வடகாடு காவற்துறையால் அவர் மீட்கப்பட்டார்.[3]

போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதுதொகு

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற எரிவாயு உறிஞ்சும் திட்டங்களைத் தொடரப் போவதில்லை என்று நடுவண் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று நெடுவாசல் போராட்டம் 2017, மார்ச்சு 10ஆம் நாள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் என்று பல தரப்பினர் தொடர்ச்சியாக 22 நாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.[4]

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைதொகு