நெதல்லூர் தேவி கோயில்
நெதல்லூர் பகவதி கோயில் எனப்படுகின்ற நெதல்லூர் தேவி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கருகாச்சல் அருகே அமைந்துள்ள கோயிலாகும். இது கேரளாவில் உள்ள புகழ்பெற்ற துர்கா பகவதி தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் மகிஷாசுரமர்த்தினியாக உள்ளார். [1]
அமைவிடம்
தொகுசங்கனாச்சேரி-வாழூர், கோட்டயம்-புனலூர் மாநில நெடுஞ்சாலைகள் நெதல்லூர் சந்திப்பில் சந்திக்கின்றன. கருகாச்சல் வழித்தடத்தில் கோட்டயத்திலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், வாழூர் வழித்தடத்தில் சங்கனாச்சேரியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் கோயில் உள்ளது.
திருவிழா
தொகுஇந்தக்கோயிலின் முக்கிய திருவிழா விருச்சிகம் (நவம்பர்-டிசம்பர்) மாதத்தில் திருக்கார்த்திகை விழாவாகும். மற்றொரு விழா நவராத்திரி ஆகும்.