நெப்டூனைட்டு

சிலிக்கேட்டு வகை கனிமம்

நெப்டூனைட்டு (Neptunite) என்பது KNa2Li(Fe2+,Mn2+)2Ti2Si8O24 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சிலிக்கேட்டு வகைக் கனிமமாகும். மாங்கனீசு உலோகத்தின் அளவு அதிகரிக்கும்போது இதே கனிமம் மாங்கன்-நெப்டூனைட்டு என்ற கனிமத் தொடர்வரிசையை உருவாக்குகிறது. இக்கனிமத்தில் இடம்பெற்றுள்ள தைட்டானியம் உலோகத்தை வனேடியம் உலோகம் இடப்பெயர்ச்சி செய்தால் வாடாட்சுமைட்டு என்ற கனிமம் உருவாகிறது.

நெப்டூனைட்டு
Neptunite
நெப்டூனைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு வகை
வேதி வாய்பாடுKNa2Li(Fe2+,Mn2+)2Ti2Si8O24
இனங்காணல்
நிறம்கருப்பு; ஆழ்ந்த சிவப்பு-பழுப்பு
படிக இயல்புபட்டகம்
படிக அமைப்புஒற்றைச் சரிவு
இரட்டைப் படிகமுறல்{301} இல் முழுமையாக ஊடுருவிப் பரவும்
பிளப்பு{110} இல் சிறப்பு
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5-6
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்பழுப்பும் செம்பழுப்பும்
ஒளிஊடுருவும் தன்மைகிட்டத்தட்ட ஒளிபுகாது
ஒப்படர்த்தி3.19 - 3.23
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα=1.69-1.6908, nβ=1.6927-1.7, nγ=1.7194-1.736
இரட்டை ஒளிவிலகல்0.0294-0.0452
பலதிசை வண்ணப்படிகமைx=மஞ்சள்-ஆரஞ்சு, y=ஆரஞ்சு, z=அடர் சிவப்பு
2V கோணம்36° to 49°
பிற சிறப்பியல்புகள்அழுத்த மின்சாரம்
மேற்கோள்கள்[1][2][3]

வடக்கு கிரீன்லாந்தின் நர்சார்சுக் பகுதியில் பெக்மாடைட்டு என்ற அனற்பாறையில் 1893 ஆம் ஆண்டு நெப்டூனைட்டு முதலில் கண்டறியப்பட்டது. இது அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் சான் பெனிட்டோ மாகாணத்திலுள்ள அடர்பச்சைநிறப் பாறைகளிலும் கிடைக்கிறது. கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள இலாயர் புனித மலையிலும், சோவியத் உருசியாவின் கோலா தீபகற்பத்திலும் கூட நெப்டூனைட்டு கனிமம் கிடைக்கிறது.[1]

இசுகாண்டிநேவிய மற்றும் ரோமானிய கடல்-கடவுளை அடிப்படையாகக் கொண்டு இக்கனிமத்திற்கு நெப்டூனைட்டு என்று பெயரிடப்பட்டது.[2] பன்னாட்டு கனிமவியம் சங்கம் நெப்டூனைட்டு கனிமத்தை Npt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

அமெரிக்க மணிக்கற்களியல் நிறுவனம் 11.78 காரட் நெப்டூனைட்டு கனிமத்தை இராமன் நிறமாலையியலில் அடையாளம் கண்டது.[5]

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் பெனிட்டோ மாகாணத்தில் கிடைக்கும் நெப்டூனைட்டு படிகம் (அளவு 2.5 செ.மீ

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mineral Handbook
  2. 2.0 2.1 Mindat with location data
  3. Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  5. Cooper, Amy; Allen, Tara (Summer 2013). "Rare faceted neptunite". Gems & Gemology (Gemological Institute of America) 49 (2). https://www.gia.edu/gems-gemology/summer-2013-labnotes-rrare-faceted-neptunite. பார்த்த நாள்: April 18, 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டூனைட்டு&oldid=3938321" இலிருந்து மீள்விக்கப்பட்டது