நெப்போலியன் திறப்பு

சதுரங்கத் திறப்பு

நெப்போலியன் திறப்பு (Napoleon Opening) என்ற சதுரங்க திறப்பு ஆட்டம் பின் வரும் வழக்கத்திற்கு மாறான நகர்வுகளுடன் தொடங்குவதாக அடையாளப்படுத்தப்படுகிறது.

நெப்போலியன் திறப்பு
Napoleon Opening
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
e5 black pawn
e4 white pawn
f3 white queen
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 e5 2.Qf3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் C20
பெயரிடப்பட்டது நெப்போலியன் போனபார்ட்டு
மூலம் திறந்த ஆட்டம்
Chessgames.com opening explorer
1. e4 e5
2. Qf3

வேவார்டு ராணி தாக்குதல் திறப்பு ஆட்டம் போல (2.Qh5), வெள்ளை மாணவகன் முற்றுகை நம்பிக்கையுடன் (2.Qf3 Nc6 3.Bc4 Bc5?? 4.Qxf7#), ஆனால் பொறியிலிருந்து கருப்பு எளிதாக தப்பிக்க முடியும்.

வரலாறு

தொகு

பிரான்சு நாட்டு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டு நினைவாக இத்திறப்புக்கு நெப்போலியன் திறப்பு என்று பெயரிடப்பட்டது. நெப்போலியன் சதுரங்க விளையாட்டின் மீது ஆழ்ந்த காதல் கொண்டிருந்தார். ஆனால் இவர் ஒரு சாதாரண சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார் [1]. 19 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியிலிருந்து இப்பெயர் பயன்பாட்டிற்கு வந்தது [2].1809 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் இவர் இவ்வகையான திறப்புடன் ஆட்டத்தைத் தொடங்கி விளையாடினார். எதிர்த்து விளையாடிய தானியங்கி சதுரங்க விளையாட்டு இயந்திரம் (தி டர்க்) டர்க்கிடம் தோற்றுப்போனார். சதுரங்க மாசுட்டர் யோகான் ஆல்கேயர் இந்த இயந்திரத்தை அப்போது உருவாக்கியிருந்தார் [3]. நெப்போலியனின் மனைவியும் மகாராணியுமான யோசுப்பீனையும் அவருடைய இழிவான துரோகத்தையும் கூட இப்பெயர் இலெசாக கோடிட்டு காட்டுவதாகவும் கொள்ளலாம் ref>Napoleon Himself, 2005, John Schneider</ref>. நெப்போலியனால் அவருடைய மனைவியை வீட்டிலேயே வைத்திருக்க முடியாத இயலாமையைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்.

மதிப்பீடு

தொகு

நெப்போலியன் திறப்புடன் விளையாடுவது ஒரு வலுவற்ற தொடக்கமாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு உரிய காலத்திற்கு முன்னரே வெள்ளை ராணி வெளியில் வந்து தாக்குதலில் ஈடுபடுகிறது. ராசாவின் பக்க்க் குதிரையின் முன்னேற்றத்திற்கு பேருதவி புரியும் சதுரத்தை இது பறிக்கிறது. வேவார்டு ராணி தாக்குதல் திறப்பு ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் வேவார்டு ராணியின் தாக்குதலில் விசையும் வலிமையும் அதிகமாக உள்ளது. .

—2.Qh5 நகர்வினால் கருப்பு ஆட்டக்காரர் முதலில் தன்னுடைய e-சிப்பாயை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. (வழக்கமாக 2...Nc6 நகர்வு), பின்னர் 3.Bc4 என்ற வெள்ளையின் நகர்வு, பின்னர் கருப்பை (3...g6 என்ற விலாமடிப்புத் தேர் நகர்வை செய்ய வலியுறுத்துகிறது. 3...Qe7 என்ற வலிய தாக்குதல் நகர்வு வெள்ளை அமைச்சரின் 3.Bc4 நகர்வின் நோக்கத்தை தடுக்கிறது. அல்லது 3...Qf6 என்ற கருப்பு ராணியின் நகர்வினால் குதிரையின் முன்னேற்ரத்திற்கு உதவியாக இருக்கும் f6 சதுரம் பறிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது. 2.Qf3 என்ற வெள்ளையின் நகர்வினால் கருப்பு காய்களுடன் விளையாடுபவருக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Murray, H.J.R. A History of Chess (London: Oxford University Press), 1913, p. 877.
  2. Winter, Edward (1998 with updates). "Napoleon Bonaparte and Chess by Edward Winter". பார்க்கப்பட்ட நாள் 18 January 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Murray, H.J.R. A Short History of Chess (London: Oxford University Press), 1963 posthumously, p. 79.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்போலியன்_திறப்பு&oldid=2630600" இலிருந்து மீள்விக்கப்பட்டது