நெய்க் கொட்டை

நெய்க்கொட்டையின் தாவர பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா. இணை தாவர பெயர் ஹா.இம்பிரிக்கேட்டா என்பதாகும். இந்தியாவில் அஸ்ஸாம், ஒடிசா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1 கி.மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்கிறது. இது அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இதன் அடிமரம் சீராக இருக்கும். பட்டை இளம் பழுப்பு நிறமாக இருக்கும். இலை மாற்றுஅடுக்கில் 3-4 இரட்டை சிறகு கூட்டிலையாக இருக்கும். சிற்றிலைகள் முட்டை நீள்வட்டமானவை.

நெய்க் கொட்டை
பூ

புல்லி இதழ்கள் தொகு

4-5 நேரானவை. சமமாயும் திருகு இதழ் அமைவிலும் இருக்கும்.

அல்லி இதழ்கள் தொகு

4-5 வழக்கமான கால்களுடன் குறுகி நீள்வட்டமாகவும் செதில்களற்றும் இருக்கும். வட்டத்தட்டு தெளிவற்றது.

மகரந்ததாள்கள் தொகு

5-8 வட்டத்தட்டின் உள்புறத்தில் செருகியிருக்கும். மகரந்தக்கம்பி மேன்மையாய் இருக்கும். மகரந்தப்பை நீள்சதுரமாயிருக்கும். சுலகமுடி மெலிந்து, ஏறக்குறைய திருகியிருக்கும். ஓவ்வொரு சூலக அறையும் இரண்டு சூல்களைக் கொண்டிருக்கும்.

கனி தொகு

கனி இரண்டு தடுக்கிதழ்களுடன் பழுப்பு அரஞ்சு நிறம் கொண்டது.

பயன்கள் தொகு

காய்கள் சோப்பு போன்ற நுரை தரும். இவ்விதையில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாத வலிக்குத் தடவலாம்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.biotik.org/india/species/h/harparbo/harparbo_en.html
  2. Hyland, B. P. M.; Whiffin, T.; Zich, F. A.; et al. (Dec 2010)
  3. Australian National Biodiversity Research; the Australian Tropical Herbarium, James Cook University. Retrieved 13 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்க்_கொட்டை&oldid=3596450" இலிருந்து மீள்விக்கப்பட்டது