நெய்யருவி
செங்கோட்டையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது
நெய்யருவி (Neyyaruvi) என்பது தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் குண்டாறு அணையின் மேலாக உள்ள பல்வேறு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதியுள்ள ஒரு அருவியாகும்.[1] தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 1.5 கிமீ அடுத்தும் செங்கோட்டையிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் உள்ளது. குண்டாறு அணைக்கு மேல் பல இடங்களில் தனியாருக்கு சொந்தமான அருவிகள் உள்ளன. [2]
குண்டாறு நீர்தேக்கத்திற்கு இந்த அருவியை முக்கிய நீராதாரமாகும். மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் மிகவும் பிரபலமான குற்றாலத்தின் அருகில் அமைந்திருந்தாலும் இந்த அருவிக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சாகச பிரியர்களை கவரும் நெய்யருவி". www.timestamilnews.com.
- ↑ தினத்தந்தி (2022-06-06). "நெய்யருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
- ↑ விகடன். "குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு!". www.vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.