குண்டாறு (அரிகர நதி)
குண்டாறு என்பது குற்றாலத்தில் உற்பத்தியாகும் சிற்றாற்றின் இரண்டாம் நிலை துணையாறாகும். குண்டாறு சிற்றாற்றின் முதல் நிலை துணையாறான அரிகர நதியில் கலக்கிறது. அரிகர நதி சிற்றாற்றில் நேரடியாக தென்காசியில் இணைகிறது. இந்த ஆற்றின் மூலம் நேரடியாக 465.39 ஹெக்டேர்களும் குண்டாற்றின் துணையாறான மொட்டையாறு மூலம் மறைமுகமாக 141.64 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு 7 அணைக்கட்டும் ஒரு தேக்கமும் உள்ளன.
இதற்கான தேக்கம் கண்ணுப்புளி மெட்டு அருவியின் அருகில் உள்ளது. இத்தேக்கம் சுற்றுலா பயனிகள் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுளதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்
தொகு- http://www.nellai.tn.nic.in/rivers.html பரணிடப்பட்டது 2018-01-27 at the வந்தவழி இயந்திரம்
- http://www.whereincity.com/india/tamilnadu/rivers.php பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்