நெல்சன், நியூசிலாந்து
நெல்சன் (Nelson) நியூசிலாந்தில் டாசுமான் விரிகுடாவின் கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது இதேப் பெயர்கொண்ட இப்பகுதியின் பொருளியல் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. 1841இல் உருவான இந்த நகரம் நியூசிலாந்தின் இரண்டாவது பழமையான குடியேற்றமாகும். தெற்குத் தீவின் மிகத் தொன்மையான இந்தக் குடியேற்றம் 1858இல் அரசாணையால் நகரமாக அறிவிக்கப்பட்டது. இதன் மக்கள்தொகை 46,437 ஆகும்.
நெல்சன் நகரம்
வகாத்து | |
---|---|
ஒற்றையாட்சி ஆணையம் | |
அடைபெயர்(கள்): டாப் ஆஃப் த சவுத், சன்னி நெல்சன் | |
குறிக்கோளுரை: பல்மம் குய் மெரூட் பெரெட் இலத்தீன் Let him, who has earned it, bear the palm | |
நாடு | நியூசிலாந்து |
ஒற்றையாட்சி ஆணையம் | நெல்சன் நகரம் |
ஐரோப்பியக் குடியேற்றம் | 1841 |
தோற்றுவித்தவர் | ஆர்த்தர் வேக்பீல்டு |
பெயர்ச்சூட்டு | ஹோரஷியோ நெல்சன் |
தேர்தல் தொகுதி | நெல்சன் |
அரசு | |
• மேயர் | ராகெல் ரீசு |
பரப்பளவு ராய் சாடிலிலிருந்து இசுடோக் வரை | |
• நிலப்பரப்பு | 445 km2 (172 sq mi) |
மக்கள்தொகை (சூன் 2014 மதிப்பீடு) | |
• நிலப்பரப்பு | 49,300 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
• நகர்ப்புறம் | 64,100 |
இனம் | நெல்சோனியர் |
நேர வலயம் | ஒசநே+12 (நியூசி.சீர்தர நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+13 (NZDT) |
அஞ்சல் குறியீடு | 7010, 7011, 7020 |
இடக் குறியீடு | 03 |
இணையதளம் | nelsoncitycouncil |
இந்த நகரத்தின் அண்மையில் அபெல் டாசுமான் தேசியப் பூங்கா, ககுரங்கி தேசியப் பூங்கா, நெல்சன் ஏரிகள் தேசியப் பூங்கா ஆகியன அமைந்துள்ளன. இந்த நகரம் பிரித்தானிய கடற்தளபதி நெல்சனின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.