நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில்
நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்குக் கிழக்கே 10 கிமீ தொலைவில் உள்ளது.
காக்கும் தெய்வம்
தொகுகாக்கும் தெய்வம் காத்தாயி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படும் அம்மன் நெல்லித்தோப்பில் நெல்லி மரங்களுக்கு இடையே இருக்கிறார். காத்யாயனி தேவியை காத்தாயி என்று வழிபடுகின்றனர்.[1]
மூலவர்
தொகுவலது கரத்தில் தாமரை மலரும், இடது கரத்தில் குழந்தையை அணைத்த கோலத்திலும் உள்ளார். அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.[1]
திருச்சுற்று
தொகுவெளிச்சுற்றில் சப்தமுனீசுவரர், லாட முனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி உள்ளனர். பேச்சாயி காத்தவராயன், மதுரைவீரன் பாவாடைராயன், பாம்பாட்டி வீரன் சன்னதிகளும் இங்கு உள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- கருணைமிகு காத்தாயி, தினகரன் பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம்