நெல்லி மஸ்லூம்
நெல்லி மஸ்லூம் (Nelly Mazloum) (பிறப்பு:1929 சூன் 9 - இறப்பு: 2003 பிப்ரவரி 21) இவர் இத்தாலிய மற்றும் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த எகிப்தியரான இவர் ஓர் நடிகையும், நடன இயக்குநரும், நடனக் கலைஞரும் ஆவார். மேலும், இவர் பாலே, நவீன நடனம், எகிப்திய நாட்டுப்புற நடனம், பாரம்பரிய ஓரியண்டல் நடனம் மற்றும் ஓரியண்டல் நடன நுட்பத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் எகிப்திய நாட்டுப்புற நடனத்தில் முன்னோடியாக இருந்தார். அதில் எகிப்தின் பாரம்பரிய நாட்டுப்புற மரபுகளை நாடகப்படுத்தப்பட்ட கலை வடிவத்தில் முதன்முதலில் பயன்படுத்தினார். நகைச்சுவை உணர்வுக்காக அறியப்பட்ட இவர், 1930களில் எகிப்தில் ஒரு குழந்தை அதிசயமாகவும், 1940களில் இருந்து 1960களில் எகிப்திய திரைப்படங்களில் பல தோற்றங்களுக்காகவும் மற்றும் எகிப்திய தொலைக்காட்சியில் இவரது நாட்டுப்புற நிகழ்ச்சிகளுக்காகவும் இவர் நன்கு அறியபடுகிறார். மேலும், இவர் "நெல்லி மஸ்லூம் அரபு குழு நடனம் " என்ற நடனக்குழுவையும் நிறுவினார்..
ஆரம்ப ஆண்டுகள்
தொகுநெல்லி-கேத்தரின் மஸ்லூம்-கால்வோ எகிப்தின் அலெக்சாந்திரியாவில் பணக்கார இத்தாலிய-கிரேக்க பெற்றோருக்குப் பிறந்தார். நேபிள்ஸில் இருந்த ஒரு இத்தாலியரான இவரது தந்தை நகைகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆசியா மைனரின் கிரேக்கத்தைச் சேர்ந்த இவரது தாயார், ஒரு திறமையான பியானோ கலைஞராக இருந்தவர். அல்ஹம்ப்ரா தியேட்டரிலிருந்து தெருவுக்கு குறுக்கே ஒரு விடுதி இவர்களுக்கு சொந்தமானது. மஸ்லூம் தனது இரண்டு வயதில் கால்களின் பக்கவாதத்தால் (போலியோமைலிடிஸ்) அவதிப்பட்டார். மேலும் ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் பாலே நடன ஆசிரியராக இருந்த அவரது மனைவியாலும் பல வருட பராமரிப்புக்குப் பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இந்த காரணத்திற்காக, நடனம் இவரது ஆர்வமாக மாறியது.[1]
தொழில்
தொகுதனது ஐந்து வயதில், இவர் ஒரு தனி நடனக் கலைஞராக நடன வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஊடகங்களால் அதிசயமான குழந்தை என்றும் அழைக்கப்பட்டார். உண்மையில் இவர் 1939-1945 முதல் குழந்தை நட்சத்திரமாக இருந்தார்.இவருக்கு இவரது தாயார், மேலாளராக இருந்தார். கோடையில் அலெக்சாந்திரியாவிலும், குளிர்காலத்தில் கெய்ரோவிலும் பணிபுரிந்தார். தனது 10ஆவாது வயதில் மஸ்லூம் ஐ ப்ரோஸ்ஃபிகோபௌலா ("அகதி பெண்", 1939) என்ற திரைப்படத்தில் தோன்றினார்.[2] இது கிரேக்க மொழியில் தயாரிக்கப்பட்டு டி. போக்ரிஸின் திரைக்கதையுடன் சோபியா வெம்போ என்பவர் நடித்திருந்தார். ஒரு குழந்தையாக இவர் பாடியா மசாப்னி நடத்தும் புகழ்பெற்ற கேசினோ ஓபராவில் நடனமாடியுள்ளார். நெல்லி நவீன நடனம் மற்றும் பாரம்பரிய பாலே நடனமாடினார். பல சந்தர்ப்பங்களில், இவர் சமியா கமல் மற்றும் உம் குல்தும் போன்ற அதே நிகழ்ச்சியில், கிங் ஃபாரூக்கின் முன் தோன்றினார். 1948 ஆம் ஆண்டில் நெல்லி மஸ்லூம் 1959 முதல் 1964 வரை கெய்ரோவில் உள்ள ராயல் ஓபரா ஹவுஸின் (டார் அல் ஓபரா) முதன்மையான நடன கலைஞராக இருந்தார். பல ஆண்டுகளாக இவர் உள்ளூர் அரங்குகளிலும் எகிப்தில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எண்ணற்ற நாட்டுப்புற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
இறப்பு
தொகுநெல்லி மஸ்லூம் 2003 பிப்ரவரி 21, அன்று ஏதென்ஸில் இறந்தார். இவரது மகள் மரியானா ரூசோ மஸ்லூம் (அவரது மேடைப் பெயர் மர்ஹாபா என்றும் அழைக்கப்படுகிறது) இவரது முன்னணி மாணவியாவார். அவர் சிறுவயதில் இருந்தே தனது தாயிடமிருந்து தொடர்ச்சியான பயிற்சியினைப் பெற்றார். மேலும் நிகழ்ச்சிகளின் போது எப்போதும் தனது தாய்க்கு உதவினார். அத்துடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பிக்கப்பட்டவர், நெல்லி மஸ்லூமின் வாழ்க்கை, நடன முறை, மரபு மற்றும் வேலை குறித்த கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை - துல்லியமான ஆவணங்கள் மற்றும் அரிய புகைப்படங்களின் ஆதரவுடன் வழங்குகிறார்.
குறிப்புகள்
தொகு- ↑ http://www.nellymazloummadri.org.gr/index.htm பரணிடப்பட்டது 2014-07-16 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2014-07-16 at the வந்தவழி இயந்திரம் Official Site
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
வெளி இணைப்புகள்
தொகு- Official Site பரணிடப்பட்டது 2018-08-13 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2018-08-13 at the வந்தவழி இயந்திரம்