நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா
நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா அகுஸ்டா (எசுப்பானியம்): Néstor Salvador Amarilla Acosta) ( பிறப்பு - ஜூலை 24, 1980 ) பரகுவையைச் சேர்ந்த பிரபல திரைக் கதாசிரியர், இயக்குநர், நடிகர், மேடை நாடக மற்றும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்[1]. நெஸ்டோர் அமாரில்லா தொலைக்காட்சி மற்றும் மேடைநாடகங்களுக்காக தொடர்ந்து எழுதி வருபவர் . கவிதையால் காப்பாற்றப்பட்டேன் என்கிற இவருடைய படைப்பு பலரையும் வெகுவாக கவர்ந்த ஒன்று. 2010, 2011-ஆம் ஆண்டுகளில் இலக்கியத்திற்கான நோபேல் பரிசுக்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. 2013-ஆம் ஆண்டு பரகுவை நாட்டின் தொலைக்காட்சி நிறுவனமான தெளிபியுச்சரோ தயாரித்த ல அகாடமியா (கல்விக்கழகம்) என்ற நிகழ்ச்சியில் பயிற்சியாளராகவும், எல் திபாத்தி (விவாதம்) என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியிருந்தார்.
நெஸ்டோர் அமாரில்லா | |
---|---|
அமாரில்லா, 2013 | |
பிறப்பு | கோலானியா ஜெனரோ ரோமிரோ, கோரோநெல் ஓவையிடூ, காகுவாசுப் பகுதி, பரகுவை | சூலை 24, 1980
தொழில் | திரைக்கதை, இயக்குனர், தயாரிப்பாளர் |
செய்திக்குறிப்பு | |
வகை | நாடகம்; நகைச்சுவை |
எழுதிய நாடகங்கள்
தொகு- "ரோசா அமெரிக்கானா" (2004)
- "வெஸ்டிடோ ரோட்டோ" (2005)
- "கிழிந்த ஆடை" (2005)
- "ல புருபேரா" (2005)
- "கவிதையால் காப்பற்றப்பட்டேன்" (2006)
- "ஐராக்கில் பிறந்தேன்" (2006)
- "பிச்சா பெலி" (2009)
- "சே, சேக்கானல்" (2009)
எழுதிய புத்தகங்கள்
தொகு- "கவிதையால் காப்பற்றப்பட்டேன்" (2006)
- "பிச்சா பெலி" (2009)
- ''ல புருபேரா'' (2005)