நேசமணிக்காக வேண்டிக் கொள்ளவும்
இணைய தகவல்
நேசமணிக்காக வேண்டிக் கொள்ளவும் , (ஆங்கிலம் : Pray for Nesamani ) , மே 2019 இல் சமூக ஊடக தளங்களில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இணையச் சுட்டனைக் குறிக்கும் .இது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைப் படமான பிரண்ட்ஸில் நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. நடிகர் வடிவேலுவின் படம் பொதித்த சுட்டனைக் கொண்டு , #Pray_for_Nesamani என்னும் ஹேஸ்டேக்(hashtag) மூலம் இணையத்தில் மிக விரைவாக பரவியது .இந்திய அளவில் , அந்த வாரத்தில் , டுவிட்டரில் , முதல் இடத்தில் இருந்த #ModiSarkar2 என்னும் சுட்டனைப் பின்னுக்கித் தள்ளி முதல் இடம் பெற்றது .[1][2]