நேத்ரா தொலைக்காட்சி

நேத்ரா தொலைக்காட்சி என்பது இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன குழுமத்தின் ஒரு அங்கமான தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை முன்னர் 'ஐ அலைவரிசை' என்ற பெயரில் ஒளிபரப்பானது. சனவரி 1, 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்கென 'நேத்ரா தொலைக்காட்சி' அலைவரிசை எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்த தொலைக்காட்சியில் ராஜ் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியின் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது.

நேத்ரா தொலைக்காட்சி
Typeரூபவாகினி
செனல் ஐ
என்.டீ.வி'
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerஇலங்கை அரசாங்கம்
Key people
மொகான் சமரநாயக்க (தவிசாளர்)
Launch date
சனவரி 1, 2008
Picture format
PAL
Official website
http://www.nethratv.lk/
Languageதமிழ்

இது தனியொரு அலைவரிசை அல்ல. தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்டாலும் ஐ அலைவரிசையில் தமிழ்ச் செய்திகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் நேரத்திற்கு மட்டும் நேத்ரா என்று பெயரிடப்படுகின்றது. அதாவது நேத்ரா என்ற பெயரில் குறிப்பிட்ட நேரங்களில் தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றன.[1]

தொடர்ச்சியாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆங்கில செய்திகள் ஆங்கில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது ஐ அலைவரிசை (Channel Eye) எனும் பெயரில் ஒளிபரப்பாகும். எதிர் காலத்தில் சிங்கள நிகழ்ச்சிகளுக்கென ரூபவாகினியும், தமிழ் நிகழ்ச்சிகளுக்கென நேத்ராவும் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கென ஐ அலைவரிசையும் என மூன்று அலைவரிசைகள் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "Nethra TV RATE CARD" (PDF). 2012-01-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்ரா_தொலைக்காட்சி&oldid=3561180" இருந்து மீள்விக்கப்பட்டது