நேந்திரம் (வாழை)

(நேந்திரம் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. நேந்திரம் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. குலைக்கு 5 முதல் 6 சீப்புகள் வரும். ஒரு சீப்பில் 10 முதல் 12 காய்கள்வரை காய்க்கும். [1][2]

நேந்திரம் பழம்

பயன்கள்

தொகு
 
நேந்திரம் பழம் சிப்ஸ்

இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரங் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை". கட்டுரை. தி இந்து. 3 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2017.
  2. "Nendran Banana gets GI tag". The Hindu. 31 March 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nendran-banana-gets-gi-tag/article7055184.ece. பார்த்த நாள்: 2015-04-01. 

வெளியிணைப்புகள்

தொகு

நேந்திரம் வாழைப் பழம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேந்திரம்_(வாழை)&oldid=4100253" இலிருந்து மீள்விக்கப்பட்டது