நேபாள் தருண் தளம்
நேபாள் தருண் தளம் (Nepal Tarun Dal) என்பது நேபாளி காங்கிரசு கட்சியின் இளைஞர் பிரிவாகும். இந்த அமைப்பு நேபாளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பணி நிலை குழுக்களுடன் மிகவும் செல்வாக்கு மிக்க இளைஞர் அமைப்புகளில் ஒன்றாகச் செயல்படுகிறது. தருண் என்ற பெயரில் இந்த அமைப்பு ஒரு பத்திரிகை வெளியீடும் உள்ளது.
नेपाल तरूण दल | |
உருவாக்கம் | 26 அக்டோபர் 1953 |
---|---|
தலைமையகம் | காட்மாண்டு |
வரலாறு
தொகு2012 ஆம் ஆண்டு நேபாள தருண் தளம் அரசாங்கம் திட்டமிட்ட தேர்தல் அரசியலமைப்பிற்கு முரணானது என்று தங்கள் நம்பிக்கையை தெரிவித்தது.[1] 14 ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று நேபாளி காங்கிரசு கட்சி 45 உறுப்பினர்களைக் கொண்ட தருண் தளத்தின் மத்திய குழுவை அறிவித்தது. உதயா சம்சேர் ராணா இக்குழுவிற்கு தலைமை தாங்கினார். நேபாள தருண் தால் அதன் 4 ஆவது தேசிய பொது மாநாட்டை பிப்ரவரி 2013 முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டது.[1]
நபி ராணா மகர் படுகொலை
தொகு2013 ஆம் ஆண்டில், இக்குழுவின் உறுப்பினர் நபி ராணா மகரின் மரணம் அரசியல் பழிவாங்கலுக்காக கொலை செய்யப்பட்டதாக நம்புவதாகவும் இக்குழு கூறியது. சல்லேரி வ.உ.சி.க்கு அருகில் உள்ள குன்றின் அடியில் நபி ராணா மகர் கண்டெடுக்கப்பட்டார், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ "Tarun Dal says its leader Rana's murdered for 'political revenge'". 6 November 2013. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.