நேபாள பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்

நேபாள நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பு சட்டமன்றத்தில் அதிகரித்துள்ளது. இது நேபாளத்தின் எதிர்கால அரசியலமைப்பை உருவாக்குவதை பாதிக்கலாம்.

சுருக்கமான அரசியல் வரலாறு தொகு

நேபாளத்தில் சர்வாதிகார ராணா ஆட்சி சுமார் 104 ஆண்டுகள் (1846-1951) நீடித்தது.[1] இதன் பிறகு, நேபாளத்தில் 1959-1960 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சுருக்கமான 18 மாதங்கள் ஆட்சிக்காலம் இருந்தது. எனினும், மறைந்த மன்னர் மகேந்திரா நாடாளுமன்றத்தை கலைத்து, அனைத்து மாநில அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டு, கட்சி இல்லாத பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தினார். இது 30 ஆண்டுகள் நீடித்தது.[2] 1990 ஆம் ஆண்டில், ஒரு ஜனநாயக சார்பு இயக்கம் மறைந்த மன்னர் பீரேந்திராவை ஒரே கட்சி அமைப்பைக் கலைத்து, அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்கி, இறையாண்மையை மக்களிடம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தியது.[1] நேபாளம் 1990 ஆம் ஆண்டில் நேபாள இராச்சியத்தின் அரசியலமைப்பின் கீழ் மீண்டும் பல கட்சி நாடாளுமன்ற அமைப்பை ஏற்றுக்கொண்டது.[1] ஆனால் மீண்டும், நாடாளுமன்றம் மே 22, 2002 அன்று அப்போதைய மன்னர் ஞானேந்திராவால் [3] அவரது தலைமையின் கீழ் நேரடி ஆட்சியை 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான இரண்டாவது மக்கள் இயக்கம் மற்றும் 2008 ஆம் ஆண்டு நேபாள அரசியலமைப்பு மன்றத்தின்படியான சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியன இறுதியாக நேபாளத்தை ஒரு கூட்டாட்சி ஜனநாயக குடியரசாக அறிவித்தது. மே 28, 2008 அன்று பல நூற்றாண்டுகள் முடியாட்சி முடிவுக்கு வந்தது. நேபாளம் 1959, 1991, 1994 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நான்கு பொது நாடாளுமன்ற தேர்தல்களையும் 2008 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டமன்ற (CA) தேர்தல்களையும் நடத்தியது.[4]

அரசியலில் பெண்களின் பங்கேற்பு தொகு

பாரம்பரியமாக, நேபாள பெண்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பங்கு இருந்தது. இருப்பினும், அவர்கள் மீண்டும், மீண்டும் செயலில் இருந்தனர். அதே நேரத்தில் நேபாளத்தில் அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நேபாள அரசியலில் பெண்களின் பங்கேற்பு 1951 இல் இருந்து ஆண்டு வரும் தன்னலக்குழுவான ராணா வம்சத்தின் [5] ஜனநாயக விரோத அரச பிரகடனத்திற்கு 1960 ஆம் ஆண்டு பெண்கள் அமைப்புகளின் குழு ஊர்வலத்தில் பகிரங்கமாக கருப்பு கொடியை அசைத்து எதிர்ப்பு தெரிவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.[6] அரசியலில் பெண்கள் சுறுசுறுப்பாக பங்கேற்பது 1990 நேபாள மக்கள் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டது. இங்கு பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்த பெண்கள் ஒரு கட்சி அமைப்பை ஒழித்து நாட்டில் பலதரப்பு ஜனநாயக அமைப்பை நிறுவுவதற்கான வெற்றியில் கணிசமான பங்களிப்பை வழங்கினர்.[6] இதேபோல், 2006 ல் 2 வது மக்கள் இயக்கத்தில் நூறாயிரக்கணக்கான பெண்கள் கூட்டாக பங்கேற்றனர். இதன் விளைவாக முடியாட்சி ஒழிக்கப்பட்டு நேபாளத்தை கூட்டாட்சி ஜனநாயக குடியரசாக அறிவித்தது.

நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களின் கீழ் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் தொகு

1959 முதல் நாடாளுமன்றத் தேர்தலில், 6 பெண் வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.[7] 1990 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் கட்டாய ஏற்பாட்டின் விளைவாக, பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் பெண்கள் வேட்புமனு தேவைப்பட்டது.[8] 1991, 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. முறையே 81 (கட்சி வேட்பாளர் 73 மற்றும் 8 சுயேட்சை), 86 (கட்சி வேட்பாளர் 74 மற்றும் 12 சுயேட்சை) மற்றும் 143 (கட்சி வேட்பாளர் 117 மற்றும் 26 சுயேச்சை) என்றவாறு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.[9] ஆனால் மொத்தமுள்ள 205 இடங்களில் 6 (2.9%,), 7 (3.4%), மற்றும் 12 (5.8%) பெண்கள் மட்டுமே (கட்சி வேட்பாளர்கள் மட்டும்) 1991, 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[7]

அரசியலமைப்பு சட்டமன்ற தேர்தல், 2008 மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொகு

சட்டமன்றங்களில் (சட்டமன்றம்-நாடாளுமன்றம்) நேபாள மகளிர் பிரதிநிதித்துவம் வியத்தகு முறையில் 2008 இல் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டமன்ற (CA) தேர்தலின் மூலம் 32.8% ஆக அதிகரித்தது. தேர்தலில், 575 இடங்களில் 191 பெண் தலைவர்கள் (33.2%) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[10] மேலும், அமைச்சரவை 26 இடங்களில் 6 பெண்களை பரிந்துரைத்தது. இதன் விளைவாக சட்டமியற்றும் நாடாளுமன்றத்தில் 197 பெண் உறுப்பினர்கள் (32.8%) இருந்தனர். இதன் விளைவாக, சட்டமியற்றும் நாடாளுமன்றத்தில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் நேபாளம் உலக அளவில் 14 வது இடத்தில் உள்ளது.[11] நேபாளத்தின் இடைக்கால அரசியலமைப்பு, 2007 மூலம் வழங்கப்பட்ட இடங்களின் இட ஒதுக்கீடு காரணமாக, பெண்களின் பிரதிநிதித்துவத்தில் கடுமையான மாற்றம் பெற்றுள்ளது எனலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Nepal's Political Development : : Nepal Constituent Assembly Portal". Nepalcaportal.org. Archived from the original on 2010-08-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  2. http://www.servat.unibe.ch/icl/np__indx.html (Nepal Index).|accessdate=2010-03-31
  3. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2003085.stm (Nepal Parliament Dissolved) (accessed 3/31/2010)
  4. "Ca Election report". Election.gov.np. Archived from the original on 2009-10-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  5. "Informal Sector Service Center (INSEC)". Inseconline.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  6. 6.0 6.1 "Status of Women in Nepal | Opinion". EverestUncensored. 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  7. 7.0 7.1 http://www.election.gov.np (yellow summary book published by the election commission in 2063)
  8. Article 114 of the Constitution of the Kingdom of Nepal, 1990. http://www.ccd.org.np/new/resources/1990_Constitution_English.pdf பரணிடப்பட்டது 2012-03-18 at the வந்தவழி இயந்திரம்
  9. http://www.election.gov.np (yellow summary book published by the election commission in 2063) and http://www.unmin.org.np/?d=peaceprocess&p=election_detail&aid=146 பரணிடப்பட்டது 2012-08-27 at the வந்தவழி இயந்திரம்
  10. "(march 17, 2010)". Everestuncensored.org. 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  11. http://www.ipu.org/pdf/publications/wmn08-e.pdf (accessed 3/17/2010)