நேமிநாத உரை

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் என்னும் நூலுக்கு 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூல் நேமிநாத உரை. [1] இந்த உரையில் 14-ஆம் நூற்றாண்டு நூல் திருநூற்றந்தாதியிலிருந்து மேற்கோள் பாடல் ஒன்றைத் தந்துள்ளது. [2] எனவே இந்த நூல் 15-ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளப்பட்டுள்ளது. வைரமோக விருத்தி எனத் தக்கயாகப் பரணித் தாழிசையில் குறிப்பிடப்படும் நூல் இந்த நேமிநாத உரையே என்பது மு. அருணாசலம் கருத்து. மு. இராகவையங்கார் இக் கருத்தைச் சான்று காட்டி நிறுவியுள்ளார்.

உரையின் சிறப்புகள்
தொகு
  • இறந்துபோன நூலாகிய அவிநயம் நூலிலிருந்து மேற்கோள் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
  • "ஆசை அல்குற் பெரியாரை" என்னும் நாரத சரிதை நூலின் தொடரை எடுத்தாள்கிறது.
  • சங்கப் பாடல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், வச்சணந்தி மாலை முதலான நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
  • இந்த உரை பொழிப்புரையாகவும், கருத்துரையாகவும் உள்ளது. சில இடங்களில் வினா-விடைகளைக் கொண்டதாய் விருத்தியுரை போலவும் உள்ளது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 90. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "முத்தன் என்கோ, முதல் மூர்த்தி என்கோ" என்னும் இந்த மேற்கோள் நேமிநாதம் 74 ஆம் பாடல் உரையாக உள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமிநாத_உரை&oldid=3278509" இலிருந்து மீள்விக்கப்பட்டது