நேரிசை ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஆசிரியப்பாவில் ஈற்றயலடி (கடைசிக்கு முந்தைய அடி) மூன்று சீர்களையும் ஏனைய அடிகள் அளவடிகளாய் நான்கு சீர்களுடனும் வருவது நேரிசை ஆசிரியப்பா எனப்படும். ஆசிரியப்பாக்களுள் மிகப் பெரும்பான்மை வழக்கில் இருப்பது இது. இயல்பானது எனும் பொருளில் இது நேரிசை ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.

எடுத்துக்காட்டு

தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

ஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் ஏகாரத்தில் முடிந்தது இது. ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரிசை_ஆசிரியப்பா&oldid=1191721" இலிருந்து மீள்விக்கப்பட்டது