நேர்மையற்ற நடுவர் உவமை
நேர்மையற்ற நடுவர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனபதை விளக்குவதற்காக கூறிய உவமையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் லூக்கா 18:1-9 இல் காணப்படுகிறது.[1][2][3]
உவமை
தொகுஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டு விதவைக்கு நீதி வழங்கினார்.
பொருள்
தொகுஇது இடைவிடாமல் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்பது உணர்த்தப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகுவெளியிணைப்பு
தொகுதமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Joel B. Green, The Gospel of Luke, Eerdmans, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802823157, pp. 63643.
- ↑ Craig L. Blomberg, Interpreting the Parables, InterVarsity Press, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0830812717, p. 275.
- ↑ Sirach 35:12–18, New American Bible.