நேவல் அருவி
நேவல் அருவி என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு அருவி ஆகும்.
நேவல் அருவி | |
---|---|
அமைவிடம் | ஆத்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், நியூ இங்கிலாந்து |
ஆள்கூறு | 30°23′55″S 152°45′35″E / 30.39861°S 152.75972°E[1][2] |
நீர்வழி | பெயரிடப்படாத நீரோடை |
அமைவிடம்
தொகுஇந்த அருவி டாரிரிகோ நகரத்திம் மற்றும் டாரியோ தேசிய பூங்கா ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த அருவி குன்றின் வழியே செல்கிறது மேலும் அருவி நீர் பள்ளத்தாக்கின் கீழே பெலங்கர் ஆற்றில் நுழைவதற்கு முன்பு ஒரு ஒற்றைப் பாலத்தின் கீழ் செல்கிறது. நியூவெல் அருவியிலிருந்து சுமார் 50 மீட்டர் (160 அடி) தொலைவில் உள்ள ஒரு சிறிய ஓய்வுப்பகுதியில் இருந்து மக்கள் அருவியைப் பார்க்க முடியும். சுற்றுலா மேசைகள், தங்குமிட கொட்டகை, குப்பைத் தொட்டிகள் இவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெலிங்கர் பள்ளத்தாக்கிற்கு அருகே நெல் ஃபோல்ட் காட்சிமுனை உள்ளது. [3].[3]
அருவிக்குச் செல்லும் வழியானது கடும் மழைக்காலங்களில் நீர் சூழும் நிலை ஏற்பட்டு அருவியை அருகில் சென்று பார்க்கும் சந்தர்ப்பத்தை கணிசமாக குறைத்துவிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:NSW GNR
- ↑ "Newell Falls (NSW)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
- ↑ "Newell Falls and Sherrard Falls". World of Waterfalls. 7 May 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.