நைக்டிபாட்ராச்சசு ஆனமலையென்சிசு

நைக்டிபாட்ராச்சசு ஆனமலையென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. ஆனமலையென்சிசு
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு ஆனமலையென்சிசு
மையர்சு, 1942
வேறு பெயர்கள்

நானோபேட்ராச்சசு ஆனமலையென்சிசு மையர்சு, 1942

நைக்டிபாட்ராச்சசு ஆனமலையென்சிசு (Nyctibatrachus anamallaiensis) என்பது ஆனைமலை இரவு தவளை எனப்படும். இது நைக்டிபேட்ராச்சிடே குடும்பத்தில் நைக்டிபாட்ராச்சசு பேரினத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். ஆனைமலை இரவு தவளை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இது தமிழ்நாட்டின் ஆனைமலை மலைப் பகுதியில் உள்ள வால்பாறை என்ற வட்டாரத்தின் அருகிலிருந்து மட்டுமே காணப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக நைக்டிபாட்ராச்சசு பெடோமி சிற்றினத்தினை ஒத்ததாகக் கருதப்பட்டது.[2]

நைக்டிபாட்ராச்சசு ஆனமலையென்சிசு என்பது ஒரு சிறிய வகைத் தவளையாகும். இதனுடைய மூக்கு-இனப்புழை வரையுள்ள உடல் நீளம் 17 மிமீ ஆகும். இந்த வகைத் தவளைகள் சதுப்புநில மேய்ச்சல் பகுதியில் உள்ள சிறிய நீரோடையிலிருந்தும், மாதிரிகள் தண்ணீரின் அருகிலும் காணப்பட்டன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://amphibiansoftheworld.amnh.org/Amphibia/Anura/Nyctibatrachidae/Nyctibatrachinae/Nyctibatrachus/Nyctibatrachus-anamallaiensis
  2. Frost, Darrel R. (2013). "Nyctibatrachus anamallaiensis (Myers, 1942)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 December 2013.
  3. Myers, George S. (1942). "A new frog from the Anamallai Hills, with notes on other frogs and some snakes from South India". Proceedings of the Biological Society of Washington 55: 49–56. https://www.biodiversitylibrary.org/part/46076.