நைட்ரசனின் கலப்பு ஆக்சைடுகள்
நைட்ரசனின் கலப்பு ஆக்சைடுகள் (Mixed oxides of nitrogen) என்பவை இருநைட்ரசன் நான்காக்சைடு மற்றும் நைட்ரசன் ஈராக்சைடு (N2O4 மற்றும் NO2) ஆகியனவற்றில் உள்ள நைட்ரிக் ஆக்சைடின் (NO) கரைசலைக் குறிக்கிறது. இதை ஆங்கிலச் சுருக்கக் குறியீட்டில் MON என்று எழுதுவார்கள். ராக்கெட்டுகளின் உந்துபொருள் திட்டத்தில் இக்கலவையை ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தலாம்[1]. பலவகையான சேர்க்கை அளவுகள் இக்கலவை உருவாக்கத்தில் கையாளப்படுகின்றன. இவ்வகைச் சேர்க்கை அளவுகள் சுருக்கமாக MONi என்ற சுருக்கக் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இங்கு i என்பது கல்வையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடின் சதவீதத்தைக் காட்டுகிறது. உதாரணமாக MON3 என்று குறியிட்டால் அக்கலவையில் 3% நைட்ரிக் ஆக்சைடு இருப்பாதாகப் பொருளாகும். MON25 என்றால் 25% நைட்ரிக் ஆக்சைடு என்று பொருள். அதிகபட்ச வரம்பு MON40% ஆகும். ஐரோப்பாவில் MON1.3 அளவு பரவலாக ராக்கெட் உந்துபொருள் திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் நாசாவில் MON 3 பயன்படுத்தப்படுகிறது. நைட்ரிக் ஆக்சைடு அதிக சதவீதம் பயன்படுத்தப்பட்டால் திரவத்தின் அரிக்கும் தன்மை குறைகிறது. செலவு அதிகமாகும் என்பது மட்டுமின்றி ஆக்சிசனேற்ற வீதமும் குறைந்துவிடும் என்பதும் கவனிக்கத் தக்கது ஆகும்.
கூடுதலாக நைட்ரிக் ஆக்சைடு சேர்ப்பதால் கலவையின் உறைநிலை மேலும் கணிசமாகக் குறைகிறது. தூய்மையான நைட்ரசன் நான்காக்சைடின் உறைநிலை −9 °செ ஆனால் MON3 இல் −15 °செ மற்றும் MON25 இல் −55 °செ ஆகும்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wright, Alfred C. (February 1977). USAF Propellant Handbooks. Nitric Acid/Nitrogen Tetroxide Oxidizers. Volume II. USAF (Report). Defense Technical Information Center. AFRPL-TR-76-76 (DTIC Accession Number ADA036741). Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
{{cite report}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Robert A. Braeunig (2008). "Rocket Propellants". Rocket and Space Technology. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
.