நைட்ரோபுருசைடு வினை
புரதங்களில் காணப்படும் சிசுடீனிலுள்ள தனி தயோல் தொகுதிகளை கண்டறியப் பயன்படும் வினை
நைட்ரோபுருசைடு வினை (Nitroprusside reaction) என்பது புரதங்களில் காணப்படும் சிசுடீனிலுள்ள தனி தயோல் தொகுதிகளை கண்டறியப் பயன்படும் வினையாகும். தயோல் என்பது கரிமக் கந்தகச் சேர்மமாகும். தனி தயோல் தொகுதிகளைப் பெற்றிருக்கும் புரதங்கள், சோடியம் நைட்ரோபுருசைடும் அமோனியம் ஐதராக்சைடும் சேர்க்கும்போது சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. சில புரதங்கள் இயல்புநீக்க வினைக்கு உட்படுத்தும்போது தயோல் தொகுதிகளை விடுவித்து நேர்மறையான முடிவைத் தருகின்றன [1][2][3]. பொதுவாக நைட்ரோபுருசைடு சோதனை சிறுநீர் பரிசோதனையில் வழக்கமாக கீட்டோன்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிறது [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chatterjea (1 January 2004). Textbook of Biochemistry for Dental/Nursing/Pharmacy Students. Jaypee Brothers Publishers. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-204-6.
- ↑ Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
- ↑ R.A. Joshi (2006). Question Bank of Biochemistry. New Age International. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1736-4.
- ↑ Jerry Kaneko, Jiro; Harvey, John; Bruss, Michael (2008). Clinical Biochemistry of Domestic Animals. Academic Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080568829.
.