நைனா பால்சவர்
நைனா பால்சவர் அகமது (Naina Balsaver) (பிறப்பு 1959) ஒரு இந்திய நடிகை, விளம்பரத் தாரகை மற்றும் பெமினா இந்திய அழகிப் பட்டம் 1976 வென்றவர் ஆவார். [1] [2]
நைனா பால்சவர் | |
---|---|
பிறப்பு | 1959 (அகவை 64–65) உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | விளம்பரத் தாரகை, நடிகை, நகை வடிவமைப்பாளர் |
உயரம் | 1.66 மீ |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | பெமினா இந்தியப் பிரபஞ்ச அழகி 1976 பெமினா இந்திய உலக அழகி 1976 |
தலைமுடி வண்ணம் | கருப்பு |
விழிமணி வண்ணம் | கருப்பு |
முக்கிய போட்டி(கள்) | பெமினா இந்திய அழகிப் போட்டி 1976 வெற்றியாளர் பிரபஞ்ச அழகிப் போட்டி 1976 (இடமேதும் பெறவில்லை) |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் போட்டி
தொகுநைனா பால்சவர் உத்தரபிரதேசத்தில் பிறந்தார். 1976 ஆம் ஆண்டில் அவர் ஃபெமினா இந்திய அழகிப் போட்டியில் போட்டியிட்டு இறுதியில் விரும்பத்தக்க கிரீடத்தை வென்றார். பிரபஞ்ச அழகிப் போட்டி 1976 மற்றும் உலக அழகிப் போட்டி 1976 ஆகிய போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த அவர் நியமிக்கப்பட்டார். இருப்பினும், 1976 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் அவர் போட்டியிடவில்லை, ஏனெனில் இரண்டு தென்னாப்பிரிக்க போட்டியாளர்கள் - ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு - இனப் பிரிவினையின் நிறவெறி கொள்கைக்கு இணங்க இந்தப் போட்டியில் அவர் பங்கு பெறும் வாய்ப்பு இல்லாது போனது. ஆனால், அதே ஆண்டு, அவர் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்றார், ஆனால், வெற்றியாளர் இடங்களை அவரால் பெற இயலவில்லை.
ஃபெமினா இந்திய பிரபஞ்ச அழகிப் பட்டம், மற்றும் ஃபெமினா இந்தியா உலக அழகிப் பட்டங்களை சுமந்த ஒரே ஃபெமினா இந்திய அழகிப் போட்டி வெற்றியாளர் ஆவார்.
தொழில்
தொகுஇவர் பாலிவுட் படங்களில் நடித்தார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான சோப் ஓபரா, மன்சில் ஆகியவற்றில் நடித்தார் . அவர் என்.டி திவாரிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார், ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார். [3]
இவர் நகை வடிவமைப்பாளரும் ஆவார். [4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், முதலில் அவர் 19 வயதிலும். பின்னர் அரசியல்வாதியும், நிலங்களைப் பிரபலப்படுத்தி அவற்றை விற்பனை செய்யும் தொழில்முனைவருமான அக்பர் அகமதுவை மணந்தார். [5] அவரது முதல் கணவரின் பெயர் ரியாஸ் இஸ்மாயில் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://indiatoday.intoday.in/story/No+longer+taboo/1/3367.html
- ↑ http://www.dnaindia.com/entertainment/report_politics-is-a-way-of-life_1046267
- ↑ http://www.expressindia.com/ie/daily/19991006/ige06022.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-10-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.