நைனித்தால் திருமணப் படுகொலை
இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் நடைபெற்ற ஒரு படுகொலை
நைனித்தால் திருமணப் படுகொலை (Nainital wedding massacre) இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள குமாவுன் கோட்டத்தின் நைனித்தால் நகரத்தில் நடந்த ஒரு படுகொலை நிகழ்ச்சியைக் குறிக்கிறது. 21 ஏப்ரல் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று நைனித்தாலில் ஒரு திருமண விழாவில் குடிபோதையில் இருந்த கூர்க்கா சிப்பாய் 22 விருந்தினர்களை கத்தியால் குத்தினார். இந்நிகழ்வால் அவர்கள் அனைவரும் மரணமடைந்தனர்.
நைனித்தால் திருமணப் படுகொலை Nainital wedding massacre | |
---|---|
இடம் | நைனித்தால், இந்தியா |
நாள் | 21 ஏப்ரல் 1950 |
தாக்குதல் வகை | படுகொலை |
ஆயுதம் | கத்தி |
இறப்பு(கள்) | 22 |
காயமடைந்தோர் | ? |
தாக்கியோர் | அடையாளம் தெரியாத நபர் |
கத்தியுடன் ஆயுதம் ஏந்திய அந்த நபர், பணக் கடன் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட நபர் ஒருவர் சமூகத்தில் உயர்ந்த பிராமண சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்தார். தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர்களை கத்தியால் குத்தினார். குத்துப்பட்டு இறந்தவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாவர்.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 22 guests slain, The Bend Bulletin (21 April 1950)
- ↑ 22 guests slain as wedding held, The Ogden Standard-Examiner (21 April 1950)
- ↑ Drunk Gurkha Kills 22, Los Angeles Times (22 April 1950) பரணிடப்பட்டது 13 மார்ச்சு 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Murders 22 at wedding, The Huntingdon Daily News (22 April 1950)