நைரஞ்சனா கோஷ்

நைரஞ்சனா கோஷ் (Nairanjana Ghosh ) இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். 2004ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஸ்டார் ஆனந்தா (இப்போது ஏபிபி ஆனந்தா ), கொல்கத்தா தொலைக்காட்சி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் டைம் ஆகியவற்றுடன் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகபட்சமாக பார்க்கப்படும் நேரத்தின் செய்தி தொகுப்பாளராக இவர் பலவிதமான செய்திகளைப் பற்றிய விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார். இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கதைகள் குறித்து விரிவாக அறிக்கை அளித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் இந்தியாவின் கொல்கத்தாவின் டெலி சினி விருதுகளில் சிறந்த செய்தி தொகுப்பாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நைரஞ்சனா கோஷ்
நியூஸ் டைமில் நைரஞ்சனா கோஷ்
பிறப்புபிப்ரவரி 13
கொல்கத்தா
தேசியம்இந்தியன்
கல்விபுனித சேவியர் கல்லூரி கொல்கத்தா
பணிபத்திரிக்கையாளர்
பட்டம்பத்திரிகையாளர், செய்தி தொகுப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நைரஞ்சனா கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார்.

கல்வி

தொகு

நைரஞ்சனா தனது பள்ளிப்படிப்பை கொல்கத்தாவின் லோரெட்டோ பள்ளிகளிலும், கொல்கத்தாவின் நவீன உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார் . கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தகவல் தொடர்பியலலில் முதுகலை சான்றிதழ் பட்டமும் பெற்ற்றுள்ளார்.

தொழில்

தொகு

நைரஞ்சனா தனது வாழ்க்கையை ஸ்டார் ஆனந்தாவில் (இப்போது ஏபிபி ஆனந்தா ) 2004 திசம்பரில் ஒரு பத்திரிகையாளராகவும் செய்தி தொகுப்பாளராகவும் தொடங்கினார். 2005 சூனில் அதன் தொடக்கத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கிய முகமாக கருதப்பட்டார். பின்னர் கொல்கத்தா தொலைக்காட்சியில் மூத்த செய்தி தொகுப்பாளராகவும் பத்திரிகையாளராகவும் சேர்ந்தார். இங்கேயும், தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கிய முகமாகவும் மற்றும் பலவிதமான செய்திகளைப் புகாரளிப்பதைத் தவிர விவாதங்களையும் விவாதங்களையும் நடத்தினார். இவரது பிரபலமான நிகழ்ச்சிகளில் ஜீரோ ஹவர், ஸ்டேடியம், கொல்கத்தா லைவ், 8 டார் கோபர் போன்றவை அடங்கும். நைரஞ்சனா 2009 சூலையில் நியூஸ் டைமில் ஒரு மூத்த செய்தி தொகுப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் தயாரிப்பாளராக சேர்ந்தார். தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கிய முகம் தவிர, வெளியீட்டு செயல்பாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி கொள்கையை வகுத்தார். நியூஸ் டைம் நைரஞ்சனாவிலிருந்து பல ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்றுக்கொண்டது.

விருதுகள் மற்றும் சாதனைகள்

தொகு

2007ஆம் ஆண்டில் இந்தியாவின் கொல்கத்தாவின் டெலி சினி விருதுகளில் நைரஞ்சனா இந்த ஆண்டின் சிறந்த செய்தி தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டில் கொல்கத்தா தொலைகாட்சியால் இவருக்கு "பங்களார் முக" விருது (வங்காள முகம்) வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் டியாகோ அர்மாண்டோ மரடோனாவின் கொல்கத்தா வருகையை இவர் பிரத்தியேகமாக விவரித்தார். சர்வதேச துடுப்பாட்ட சங்கத்தின் உலகக் கோப்பை 2011ஐ அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு நிகழ்ச்சிகளை நியூஸ் டைமிற்காக முன்னாள் இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலியுடன்நைராஞ்சனா இணைந்து பிரத்தியேகமாக நடத்தினார். 3 தனித்தனி 24 * 7 செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களை அறிமுகப்படுத்திய முகம் என்ற அரிய சாதனையை நைராஞ்சனா அடைந்துள்ளார்.

குறிப்புகள்

தொகு
  • "Nairanjana Ghosh Profile". Kolkata: Kolkata TV. 31 May 2009. Archived from the original on 1 October 2011. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைரஞ்சனா_கோஷ்&oldid=2938557" இலிருந்து மீள்விக்கப்பட்டது