நைஸ் டா சில்வேரா

நைஸ் டா சில்வேரா ( Nise da Silveira, பிப்ரவரி 15, 1905 - அக்டோபர் 30, 1999) ஒரு பிரேசிலிய மனநல மருத்துவரும்[1], கார்ல் யுங்கு என்ற புகழ் பெற்ற உளவியலாளரின் மாணவரும் ஆவார்.

நைஸ் டா சில்வேரா
1970 களில் நைஸ் டா சில்வேரா
பிறப்பு(1905-02-15)பெப்ரவரி 15, 1905
மாசியோ,அலாகோஸ், பிரேசில்
இறப்புஅக்டோபர் 30, 1999(1999-10-30) (அகவை 94)
இரியோ டி செனீரோ, பிரேசில்
தேசியம்பிரேசிலியர்
துறைஉளவியல்
கல்வி கற்ற இடங்கள்பாஹியா ஃபெடரல் பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
கார்ல் யுங்கு
துணைவர்மரியோ மகலஹீஸ் டா சில்வேரா

இளமை

தொகு

சில்வேரா 1905 இல் பிரேசிலில் உள்ள அலாகோஸ் மாகாணத்தில் [2] மாசியோ என்ற இடத்தில் பிறந்தார். 1926 ஆம் ஆண்டில் பாஹியாவின் மருத்துவப் பள்ளியில் 157 ஆண்களூல் ஒரே பெண்ணாகச் சேர்ந்து பட்டம் பெற்றார் [2] அதன் பின்னர் உளவியலுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். தேசிய மனநல மருத்துவமனைகளில் மின்சிகிச்சை, இன்சுலின் சிகிச்சை மற்றும் லோபோட்டமி எனப்படும் மூளையின் செயற் திறனை மாற்ற செய்யும் அறுவை சிகிச்சை ஆகிய கொடுமையான உளவியல் சிகிச்சை முறைகளை இவர் ஒருபொழுதும் ஏற்றுக் கொண்டதில்லை.

பணிகள்

தொகு

1952 ஆம் ஆண்டில் அவர் ’’சுயநினைவிலி’’ என்ற பெயரில் ரியோ டி ஜெனிரோவில் [3] ஒரு அருங்காட்சியகத்தை] நிறுவினார. இது ஓவியம் மற்றும் வடிவழகு ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட படைப்புகளை சேகரிக்கும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும். இங்கு 1940 முதல் இன்றுவரை 3,50,000 [1][4] படைப்புகளுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. பிரேஸிலில் அவரது பணி மூலம், நைஸ் டா சில்வேரா கார்ல் யுங்குவின் உளவியலை அறிமுகப்படுத்தினார்.[1]

ஒரு சில ஆண்டுகள் கழித்து, 1956 இல், நைஸ் டா சில்வேரா தனது புரட்சிகரமான மற்றொரு திட்டத்தை உருவாக்கினார். "காசா டாஸ் பால்மேராஸ்’’ (Casa das Palmeiras" -பாம்ஸ் ஹவுஸ்), என்ற மனநல நிறுவனங்களின் முன்னாள் நோயாளிகளுக்கான ஒரு மருத்துவமனை ஒன்றை நிறுவினார். அங்கு மனநோயாளிகள் தினசரி அடிப்படையில் வெளிநோயாளிகளாக கருதப்பட்டு[4] அவர்களுடைய கலைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பிருந்தது[5] அவர் சி. ஜி. யுங்கு ஆய்வுக்குழு என்ற ஒரு குழுவை உருவாக்கி, 1968 வரை அதன் தலைமை தாங்கினார்.  

தொழில் நுட்ப சிகிச்சையின் மீதான அவரது ஆராய்ச்சியும், அன்கான்சியஸ் அருங்காட்சியகத்தின் படங்கள் மற்றும் ஆண்டுகள், கண்காட்சிகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், காட்சிக்கேள்விக் கருவிகள், பாடநெறிகள், சிம்போமிம்கள், வெளியீடுகள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றின் வழியான இவரது ஆய்வு தொழில் சிகிச்சை மற்றும் உளவியல் செயல்முறை பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. நோயாளிகளுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உணர்ச்சி ரீதியான உறவுகளை ஆராய்வதில் அவர் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.[1] அவைகளை இவர் சக சிகிச்சையாளர்கள் என அழைத்தார்.

சிறப்புகள்

தொகு

அவரது பணி அங்கீகரிக்கும் வகையில் இவருக்கு பல்வேறு அறிவுசார் புலங்களில் பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டது பிரான்ஸ், பாரிசைத் தலைமையிடமாகக் கொண்ட உளவியல் வெளிப்பாடுகளுக்கான பன்னாட்டுச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார். அவரது வேலை மற்றும் கருத்துக்கள் பிரேசில் மற்றும் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் சிகிச்சை நிறுவனங்கள் ஆகியவற்றை உருவாக்க ஊக்கமளித்தது.  

இறப்பு

தொகு

நைஸ் அக்டோபர் 30, 1999 அன்று ரியோ டி ஜெனிரோவில் இறந்தார்.

ஊடகம்

தொகு

அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் நைஸ்: தி ஹார்ட் ஆஃப் மேட்னஸ் என்ற பெயரில் 2015 பிரேசிலிய திரைப்படமாக வெளிவந்துள்ளது இப்படத்தை ராபர்ட் பெர்லிங்கர் இயக்கியுள்ளார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Nise da Silveira (1905–1999), Brazilian psychiatrist and pioneer of rehabilitation psychiatry – extra". Christopher Kowalski. cambridge.org. 02 ஜனவரி 2018. pp. இணைய வெளியீடு. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 "Os 10 anos da morte de Nise da Silveira". Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
  3. http://www.museuimagensdoinconsciente.org.br
  4. 4.0 4.1 "http://www.unesco.org/new/en/communication-and-information/memory-of-the-world/register/full-list-of-registered-heritage/registered-heritage-page-6/nise-da-silveira-personal-archive/". Documentary heritage submitted by Brazil and recommended for inclusion in the Memory of the World Register in 2017. UNESCO. 2017. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |title= (help)
  5. .https://www.researchgate.net/publication/286467439_Nise_da_Silveira_and_the_phenomenological_approach
  6. "A LOOK INTO THE LIFE OF A FAMED BRAZILIAN PSYCHIATRIST". Alison Claire Brailey. இலத்தீன் அமெரிக்க நிறுவனம்(UCLA International Institute). 22 February 2017. pp. இணைய வெளியீடு. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைஸ்_டா_சில்வேரா&oldid=3843486" இலிருந்து மீள்விக்கப்பட்டது