நோக் பண்பாடு

நோக் பண்பாடு, கிமு 1000 அளவில் வடக்கு நைசீரியாவில் தோற்றம்பெற்று, என்னவென்று தெரியாத சூழ்நிலைகளில் கிபி 300 அளவில் அழிந்துவிட்டது. இது, அவுசா, குவாரி, பிரோம், கனூரி, நூப்பே, யூக்குன் ஆகிய மக்களைக் கிளையினராகக் கொண்ட ஒரு முந்திய பண்பாட்டில் இருந்து உருவாகியதாகக் கருதப்படுகிறது. "நோக்" இற்கு வடமேற்கில் அமைந்துள்ள குவாத்தார்கவாசி அல்லது சோக்கோத்தோ என்னும் பண்பாடு நோக் பண்பாட்டைப் போன்றது அல்லது அதன் மூதாதையாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

நோக் பண்பாடு
புவியியல் பகுதிமேற்கு ஆப்பிரிக்கா
காலப்பகுதிஇரும்புக்காலம்
காலம்கிமு 1000 — கிபி 300.
வகை களம்நோக்
முக்கிய களங்கள்சமுன் டுக்கியா, தாருகா, யொசு
பிந்தியதுகுவாராராபா
நோக் சிற்பம், சுடுமண், லூவர்
பெண் சிலை
48 சமீ உயரமானது
வயது: 900 முதல் 1,500 ஆண்டுகள்

நோக் பண்பாட்டின் சமூக முறைமை மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்தது என்கின்றனர். இப்பண்பாடு, ஆப்பிரிக்காவில் பெரிய சுடுமண் சிற்பங்களை உருவாக்கிய மிகப்பழைய பண்பாடுகளுள் ஒன்றாகும். மின்னியாப்பொலிசு கலை நிறுவனத்தில் உள்ள நோக் பிரமுகரின் படிமம் இப்பண்பாட்டின் நேர்த்திக்குச் சான்றாக உள்ளது.

கருவிகள் செய்வதற்காக இரும்பை உருக்குதல், காய்ச்சியடித்தல் போன்ற பயன்பாடுகள் நோக் பண்பாட்டில் குறைந்தது கிமு 550 அளவில் அல்லது அதற்கு முன்னர் தோன்றியது. கிறித்தோபர் ஏரட் என்பவரின் கருத்துப்படி, இரும்பை உருக்கும் முறை கிமு 1000க்கு முன்னரே இப்பகுதியில் தனியாக இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Jared Diamond, 'Guns, Germs, and Steel: The Fates of Human Societies' (1997) Chapter 19
  2. Duncan E. Miller and N.J. Van Der Merwe, 'Early Metal Working in Sub Saharan Africa' Journal of African History 35 (1994) 1-36
  3. Minze Stuiver and N.J. Van Der Merwe, 'Radiocarbon Chronology of the Iron Age in Sub-Saharan Africa' Current Anthropology 1968. Tylecote 1975 (see below)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்_பண்பாடு&oldid=2461220" இலிருந்து மீள்விக்கப்பட்டது