நோமிடா சாண்டி
நோமிடா சாண்டி (Nomita Chandy) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஓர் இந்திய சமூக சேவகர் ஆவார். ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்கான சேவைகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.
நோமிடா சாண்டி Nomita Chandy | |
---|---|
பிறப்பு | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | சமூகப் பணியாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
Official web site |
சாண்டி பெங்களூரிலுள்ள அரசு சார்பற்ற நிறுவனமான ஆசிரயாவின் செயலாளராக இருந்தார்.[1] ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முக்கியமாக பணியாற்றினார்.[2] இந்த அமைப்பின் கீழ் சாண்டியும் அவரது சகாக்களும் நாட்டிற்குள் 2000 குழந்தைகளையும், அயலகக் குழந்தைகள் 1000 பேரையும் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதில் வெற்றி பெற்றனர்.[3] ஆசிரயா அமைப்பு நீல்பாக் என்ற ஒரு பள்ளியையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மழலையர் காப்பகம் ஒன்றையும் நடத்துகிறது. இக்குழந்தைகள் பராமரிப்பு மையம் பார்வை குறைபாடுள்ள எட்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறது.[4] இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு நோமிதா சாண்டிக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான் பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[5]
நோமிடா சாண்டி 2015 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களுர் நகரில் காலமானார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ashraya Home". Ashraya. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Ashraya about". Ashraya. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "TOI". TOI. 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "The Hindu". The Hindu. 19 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ Menon, Parvathi (6 June 2015). "Champion for the abandoned". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
புற இணைப்புகள்
தொகு- "Nomita Chandy". Video. YouTube. 14 April 2013. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.