நோய் தீர்க்கும் குருதித் தெளிய சிகிச்சை

நோய் தீர்க்கும் குருதித் தெளிய சிகிச்சை (Convalescent Plasma Therpy) என்பது நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ சிகிச்சையில் நன்கு உறுதிசெய்யப்பட்ட தடுப்பு மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லாத நேர்வில் குறிப்பிட்ட நோய் வந்து குணமான உயிரியிடமிருந்து குருதித் தெளியத்தை எடுத்து நோய்வாய்ப்பட்டுள்ள உயிரிக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறையாகும்.[1]நிணநீர் அல்லது தெளிய சிகிச்சைமுறையானது, குறிப்பிட்ட உயிரினங்கள் அல்லது அவற்றால் உருவாக்கப்படும் பொருள்களுக்கு எதிராக நோய்த்தடுப்பு செய்யப்பட்ட விலங்குகளின் நிணநீரைப் பயன்படுத்தி தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதை விவரிக்கிறது.இந்த சிகிச்சையானது சார்ஸ், மெர்ஸ், எபோலா போன்ற நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரலாறு தொகு

இந்த சிகிச்சையின் வரலாறானது 1890களின் மத்தியில் டிப்தீரியா மற்றும் டெட்டனசு போன்ற நோய்களின் சிகிச்கை தொடர்பாக பயன்பாட்டிற்கு வந்தது. இது மருந்தியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (1854–1917) என்பவர் இந்த சிகிச்சை முறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர், கினிப் பன்றிகளை நிணநீரைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தினார். [2] டிப்தீரியா பாக்டீரியம் நோய்த்தொற்றிலிருந்து தப்பியவர்கள் மீண்டும் ஒருபோதும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர் கவனித்ததன் அடிப்படையில், உடல் தொடர்ந்து ஒரு நோய்எதிர்ப்பொருளை உருவாக்குகிறது என்பதையும், இது தொற்றுநோய்களில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு மீண்டும் அதே தொற்றுக்காரணியிடமிருந்து ஏற்படுவைத் தடுக்கிறது என்பதையும கண்டறிந்தார்.

1918 ஆம் ஆண்டு காணப்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றின் போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கொரோனா வைரசு தொற்றுக்கெதிரான சிகிச்சையாக தொகு

தற்போது இந்த சிகிச்சை முறையானது, கொரோனா வைரசுத் தொற்று -19 இற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

சீனாவில் தொகு

சீனாவில் கொரோனா வைரசு தொற்று காணப்பட்ட நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சை முறை அளிக்கப்பட்டதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[3]

தென் கொரியாவில் தொகு

தென் கொரியாவின் செவெரென்சு மருத்துவமனையில் பேராசிரியர் சோய் ஜுன் யாங் தலைமையில் பணியாற்றிய குழு கோவிட்-19 இன் தீவிர பாதிப்புக்குள்ளான இரண்டு நோயாளிகள் இச்சிகிச்சை முறையைப் பயன்படுத்திய பிறகு நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.[4]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொகு

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் மருத்துவ மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அவ்ஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனை இந்த சிகிச்சை முறையை பின்பற்ற உள்ளது. கொரோனா தொற்று உறுதியாகி நல்ல உடல் நலத்துடன் உள்ள ஒருவரிடமிருந்து நிணநீரைக் கொடையாகப் பெற்று கொரோனா தொற்று உறுதியாகி நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவருக்கு இதை மாற்றூடுருவு செய்ய உள்ளது. தடுப்பு அல்லது சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்துக் கட்ட பரிசோதனைகளையும் கடந்து மக்களின் பயன்பாட்டிற்கு வர குறைந்தது 10 மாத காலங்கள் ஆகும் என்ற நிலையில் இந்த சிகிச்சை முறை பயனளித்தால் இறப்பு வீதத்தைக் குறைக்க முடியும் என்றும் அவ்ஸ்டன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. [5]

இந்திய அளவில் தொகு

கேரளாவில் தொகு

கேரள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு செயலாக்கக்குழுவிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நெறிமுறைகள் குழு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பதிவகம்-இந்தியா ஆகியவற்றின் ஒப்புதல் தேவைப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆர்.ஆர்.கங்ககேத்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.[6]கேரள மாநிலத்தின், திருவனந்தபுரத்தில் உள்ள சிறீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாற்றூடுருவுத் துறையானது இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.

புது தில்லியில் தொகு

ஏப்ரல் 4 அன்றைய நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு புதுதில்லியில் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு குருதித் தெளிய சிகிச்சை பயனளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. செயற்கை சுவாசக்கருவியின் உதவி தேவைப்பட்ட நிலையில் இருந்த நோயாளிக்கு, நோய் குணமடைந்த ஒருவரின் குருதித்தெளியம் ஏப்ரல் 14 அன்று நோயாளிக்கு செலுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு கொரோனா தீநுண்மத்திற்கான சோதனையில் 2020 ஏப்ரல் 21 ஆம் நாள் அன்றைய நிலையில் இரண்டு முறைகள் எதிர்மறையான முடிவு வந்துள்ளது. இதன் காரணமாக குருதித்தெளிய சிகிச்சை மற்று சிகிச்சை முறைகளுக்கு வினையூக்கியாக அமைந்து நோயிலிருந்து மீள உதவி செய்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ இயக்குநரும், இச்சிகிச்சையை கையாண்டவருமான சந்தீப் புதிராஜா தெரிவித்துள்ளார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Mupapa, K; Massamba, M; Kibadi, K; Kuvula, K; Bwaka, A; Kipasa, M; Colebunders, R; Muyembe-Tamfum, JJ (1999). "Treatment of Ebola Hemorrhagic Fever with Blood Transfusions from Convalescent Patients". The Journal of Infectious Diseases 179 Suppl 1 (179): S18–S23. doi:10.1086/514298. பப்மெட்:9988160. http://jid.oxfordjournals.org/content/179/Supplement_1/S18.full?sid=b139b993-6946-4bf7-a999-9fc837193bda. பார்த்த நாள்: 6 August 2014. 
  2. "Emil von Behring".
  3. Duan, Kai; Liu, Bende; Li, Cesheng; Zhang, Huajun; Yu, Ting; Qu, Jieming; Zhou, Min; Chen, Li; Meng, Shengli (2020-04-06). "Effectiveness of convalescent plasma therapy in severe COVID-19 patients". Proceedings of the National Academy of Sciences (in ஆங்கிலம்). doi:10.1073/pnas.2004168117. PMID 32253318. Archived from the original on 2020-04-11. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  4. Ahn, Jin Young; Sohn, Yujin; Lee, Su Hwan; Cho, Yunsuk; Hyun, Jong Hoon; Baek, Yae Jee; Jeong, Su Jin; Kim, Jung Ho; Ku, Nam Su (2020-02-17). "Use of Convalescent Plasma Therapy in Two COVID-19 Patients with Acute Respiratory Distress Syndrome in Korea". Journal of Korean Medical Science (in English). doi:10.3346/jkms.2020.35.e149. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Houston hospital first in US to try coronavirus blood transfusion therapy". The Economic Times. 2020-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  6. "Convalescent Plasma Therapy holds promise for Covid-19 patients". The Economic Times. 2020-04-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  7. "Plasma Therapy For COVID-19 Works In Delhi, 49-year-old Recovers". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.