ந,ந,ஈ,தி இளைஞர்களின் பாதிப்பு
ந,ந,ஈ,தி இளைஞர்களின் பாதிப்பு (LGBT youth vulnerability) என்பது வேற்றுப்பால்புணர் மற்றும் மாற்றுப்பாலினர் ஆகியோருடன் ஒப்பிடுகையில்,நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந,ந,ஈ,தி) இளைஞர்கள் எதிர்கொள்ளும் அதீத சமூக பாதிப்பினைக் குறிப்பதாகும். இந்த பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, வேற்றுப்பால்புணர் மற்றும் மாற்றுப்பாலினர் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மன மற்றும் உளவியல் ரீதியிலான வேறுபாடுகள் இந்த சமூகத்திற்கு அதிக அளவில் உள்ளது. ந,ந,ஈ,தி சமூகத்தின் இளைஞர்கள் தங்கள் பாலியல் நோக்குநிலை, சுய அடையாளம் மற்றும் சமூகத்தில் நிறுவனங்களின் ஆதரவு இல்லாததால், உடல்நல அபாயங்கள் மட்டுமல்லாமல், வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர்.
சுகாதார ஆய்வுகள்
தொகுந,ந,ஈ,தி இளைஞர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். சமூகத்தின் பாகுபாடு காரணமாக வேற்றுப் பால்புணர், ந,ந,ஈ,தி சமூக மக்கள் மற்ற சமூக மக்களை விட மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடும் விகிதம் 3 மடங்கு அதிகம் ஆகும். [1] உதாரணமாக,ஒரு சமூகத்தில் இருந்து இன்னொரு சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் மற்ற சமூகத்தினர் தங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற பயம், கவலைக் கோளாறு, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் அல்லது போதைப்பொருள் எடுப்பது போன்ற துஷ்பிரயோக செயல்களில் ஈடுபடல் போன்ற செயல்களுக்கு வழிவகை செய்கிறது. [1] மனநல நோய்க்கான தேசிய கூட்டமைப்பு (NAMI) ந,ந,ஈ,தியில் உள்ள பதின்ம வயது இளைஞர்கள் வேற்றுப் பால்புணர் மக்களை விட 6 மடங்கு அதிகமாக மனச்ச்சிக்கலுக்கு ஆளவதாக கூறுகிறது.தங்களது குடும்பத்தினரிடம் இருந்து எவ்வாறு வருவது எனு குழப்பமே இதற்கு காரணமாக அமைவதாக கூறுகிறது.[1]
இளமைப் பருவத்திற்கு முன்பே இளைஞர்கள் அனுபவிக்கும் முக்கியமான வளர்ச்சி நிலைகளின் காரணமாக, மனநலக் கோளாறு ஏற்படுகிறது. 2012 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 10% இளைஞர்கள் மனநிலைக் கோளாறு இருப்பதையும், 25% கவலைக் கோளாறு இருப்பதையும், 8.3% பொருள் உபயோகக் கோளாறு இருப்பதாக அறிக்கையில் தெரிய வந்தது. [2] மேலும், 10-14 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மூன்றாவது முக்கிய காரணமாகவும் மற்றும் 15-24 வயதானவர்களின் தற்கொலைக்கு இரண்டாவது முக்கிய காரணமாகவும் இது அமைகிறது. இந்த புள்ளிவிவரங்களில், ந,ந,ஈ,தி சமூகத்தின் இளைஞர்கள் மற்ற சமூக இளைஞர்களை விட மூன்று மடங்கு அதிகமாக தற்கொலை எண்ணத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். [2]
ந,ந,ஈ,தி சமூக மக்களுக்காக சில ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அது முழுமையானதாக இல்லை. விரைவாக அதிகரித்துவரும் அந்தக் குழுக்களின் மக்கட் தொகையினால் இது சாத்தியமற்றதாகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 2015 ஆம் ஆண்டு இளைஞர் இடர் மற்றும் நடத்தை கணக்கெடுப்பை (YRBS) நடத்தியது, இது நாடு முழுவதும் 9-12 வகுப்புகளில் உள்ள 16,067,000 மாணவர்களில் சுமார் 1,285,000 ந,ந,ஈ,தி இளைஞர்களை ஆய்வு செய்தது . அதில் அதிக அளவிலான இளைஞர்கள் உள மற்றும் உடல் அச்சுறுத்தல்களுக்கு ஆளானது தெரியவந்தது [3]
கணக்கெடுப்பில் 10% ந,ந,ஈ,தி மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள பொருட்களை வைத்து அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும்,34% மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளானதாகவும், 28% ந,ந,ஈ,தி மாணவர்கள் மின்னணு முறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர் [4] மற்றும் 18% மாணவர்கள் உடல் ரீதியிலான வன்முறையை அனுபவித்தனர். [5] மேலும் 18% ந,ந,ஈ,தி மாணவர்கள் ஒரு கட்டத்தில் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினர். [5] இதன்மூலம் இந்த சமூக மாணவர்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளானதற்கான தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. இருந்த போதிலும் 514,000 மாணவர்கள் தங்கள் "பாலியல் அடையாளம்" பற்றி இதில் தெளிவுபடுத்தவில்லை. [3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "LGBTQ". National Alliance on Mental Health.
- ↑ 2.0 2.1 "Mental Health in Lesbian, Gay, Bisexual, and Transgender (LGBT) Youth". Annual Review of Clinical Psychology 12: 465–87. March 2016. doi:10.1146/annurev-clinpsy-021815-093153. பப்மெட்:26772206.
- ↑ 3.0 3.1 "Sexual Identity, Sex of Sexual Contacts, and Health-Related Behaviors Among Students in Grades 9-12 - United States and Selected Sites, 2015". MMWR. Surveillance Summaries 65 (9): 1–202. August 2016. doi:10.15585/mmwr.ss6509a1. பப்மெட்:27513843. https://www.cdc.gov/mmwr/volumes/65/ss/ss6509a1.htm.
- ↑ "LGBT Youth | Lesbian, Gay, Bisexual, and Transgender Health | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
- ↑ 5.0 5.1 "LGBT Youth: Lesbian, Gay, Bisexual, and Transgender Health". www.cdc.gov. Centers for Disease Control. 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2018-04-06.