ந. நஞ்சப்பன்

தமிழக அரசியல்வாதி

ந. நஞ்சப்பன் (N. Nanjappan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

1950, செப்டம்பர், 3 அன்று பென்னாகரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். 1973 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமை கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐ. கட்சியின் சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் இவர் மீண்டும் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 15498 வாக்குகள் பெற்று பி. சீனிவாசனிடம் வெற்றிபெற்றார்.[1] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  பென்னாகரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இடையில் 1986 ஆம் ஆண்டு பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கட்சியில் பென்னாகரம் நகரச் செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், ஓகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக் குழு அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், செம்மலர், வெண்ணிலா என்ற இரு மகள்களும், கதிரவன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் "புகைகளில் ஒரு புகைச்சல்", "பணியில் பூத்த நெருப்பு" ஆகிய 2 நூல்கள் எழுதியுள்ளார்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._நஞ்சப்பன்&oldid=3559807" இருந்து மீள்விக்கப்பட்டது