ந. மகேசுவரி

ந. மகேசுவரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மாங்கனி, மோகினி, பாரதி ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார், இவர் ஒரு ஆசிரியர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

தொகு
  • "புதிய வாரிசு" (நாவல்);
  • "தாய்மைக்கு ஒரு தவம்" (சிறுகதைகள்)
  • "பிறந்த நாள் பரிசு" (மாணவர் கதைகள்)
  • ந.மகேசுவரியின் கதைகள் (2003)

பரிசுகளும் விருதுகளும்

தொகு

பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

  • சிறந்த எழுத்தாளர் விருது - தமிழ் நேசன் இதழ் (1963)
  • டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது (1989)
  • "சிறுகதைச் செல்வி" விருது - தமிழ் இலக்கியக் கழகம் (1990)
  • தங்கப் பதக்கம் - மலேசியத் தமிழ் எழுத்தாளார் சங்கம் (2005).

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._மகேசுவரி&oldid=3217732" இலிருந்து மீள்விக்கப்பட்டது