பகதூர் சிங் தாகத்

இந்திய அரசியல்வாதி

பகதூர் சிங் தாகத் (Bahadur Singh Dhakad) (இறப்பு : 19 செப்டம்பர் 2007) இந்திய அரசியல்வாதி ஆவார். தாகத் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசுட்) மத்தியக் குழு உறுப்பினராகவும், அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலக் குழுச் செயலாளராகவும் இருந்தார்.

1968 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிசுட்) சேர்ந்தார். மேலும் விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். 1986 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை, மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் சபாவின் பொதுச் செயலாளராக இருந்தார். 1980 ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1987 ஆம் ஆண்டு மாநிலச் செயலக உறுப்பினரானார். 2001 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிசுட்) மாநிலக் குழுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17வது கட்சி மாநாட்டில், கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று குவாலியரில் மாரடைப்பு காரணமாக இறந்தார். [1] இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Comrade B S Dhakad". Archived from the original on 5 October 2007. பார்க்கப்பட்ட நாள் 23 September 2007.
  2. CPI(M) leader Bahadur singh Dhakad dead
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்_சிங்_தாகத்&oldid=3845195" இலிருந்து மீள்விக்கப்பட்டது