பகல் பத்து அல்லது திருமொழித் திருநாள் என்பது மார்கழி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி வரையான பத்து (10) நாட்களுக்கு நடைபெறும் உற்சவர் திருவிழாவாகும். இவ்விழா வைணவ தலங்களான திவ்ய தேசங்களில் கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின் போது திருமால் விதவிதமான அலங்காரங்களிலும், விதவித வாகனங்களில் காட்சிதருவார்.

மேலும் இவ்விழாவின் போது, முதல் ஆயிரம் திருப்பல்லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என இரண்டாயிரம் திருப்பல்லாண்டு பாடப்பெறுகிறது.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகல்_பத்து&oldid=1428813" இலிருந்து மீள்விக்கப்பட்டது