பகவதி சரண் வர்மா

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்

பகவதி சரண் வர்மா என்பவர் இந்தி மொழிக் கவிஞர் ஆவார். இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சித்ரலேகா என்ற புதினம் குறிப்பிடத்தக்கது. இதைத் தழுவி, 1941, 1964-ஆம் ஆண்டுகளில் இரண்டு இந்தித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன.[1][2]

பகவதி சரண் வர்மா

1961-ஆம் ஆண்டில் இந்தி மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். இது பூலே பிஸ்ரே சித்ரா என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.[3] 1971-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4]

1978-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5]

எழுதியவை

தொகு

புதினங்கள்

தொகு
  • பதன்
  • சித்ரலேகா
  • தீன் வர்ஷ்
  • டேடே மேடே ராஸ்தே
  • அப்னே கிலௌனே
  • பூலே பிஸ்ரே சித்ர

சான்றுகள்

தொகு
  1. Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi cinema. Popular Prakashan. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-066-0.
  2. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Chitralekha
  3. "Sahitya Akademi Citation". Archived from the original on 2014-09-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
  4. Makers of Indian Literature-Bhagwati Charan Verma[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Biography www.india9.com.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_சரண்_வர்மா&oldid=3791542" இலிருந்து மீள்விக்கப்பட்டது