பகவல்பூர் மத்திய நூலகம்

பகவல்பூர் நகரில் அமைந்துள்ள மிகப்பழமையான ஒரு நூல்நிலையம்

பகவல்பூர் மத்திய நூலகம் (Bahawalpur Central Library) பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பகவல்பூர் நகரில் அமைந்துள்ள மிகப்பழமையான ஒரு நூல்நிலையம் ஆகும். ரூபசு டேனியல் ஐசக் மற்றும் ஐந்தாம் சாதிக் முகமது கான் ஆகியோர் 1924 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் நாள் இந்நூலகத்தை நிறுவினார்கள் [1][2]. பகவல்புர் மாகாண மக்கள் நன்கொடையாக அளித்த 1,00,000 ரூபாய் பணத்தில் இந்நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன [2].

Bahawalpur Central Library.jpg

பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நூல்நிலையங்களில் இரண்டாவது பெரிய நூலகம் பகவல்பூர் மத்திய நூலகம் ஆகும் [1][2]. நூலகத்தில் 1,00,000 புத்தகங்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன [2].

பிரதானக் கூடம், சிறுவர் பிரிவு, கேட்பொலிக் காட்சி பிரிவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூலகம் இயங்குகிறது [2]. செய்தித் தாள்களின் பழங்காலப் பதிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன [2].

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Bahawalpur Central Library: A treasure trove for bibliophiles - The Express Tribune". 25 April 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Jajja, Sumaira (11 June 2017). "HERITAGE: BAHAWALPUR'S BEST KEPT SECRETS".

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Central Library, Bahawalpur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.