பகவான் மகாவீர் பல்கலைக்கழகம்

இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகம்

பகவான் மகாவீர் பல்கலைக்கழகம் (Bhagwan Mahavir University) இந்தியாவின் குசராத்து மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ளது. ஒரு தனியார் பல்கலைக்கழகமான இது [1] 2009 ஆம் ஆண்டு குசராத் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. [2]

மாணவர்களின் திறன்களை வளர்ப்பது, புதுமையான சிந்தனையை வளர்ப்பது, வேலைவாய்ப்பை மேம்படுத்துவது மற்றும் ஒரு தொழில் முனைவோர் மனநிலையை வளர்ப்பது போன்ற புதுமையான கற்றல் நடைமுறைகளை இலக்காகக் கொண்டு பகவான் மகாவீர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பொறியியல், மருந்தகம், வாழ்க்கை மற்றும் அடிப்படை அறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "UGC University Gujarat". University Grants University. பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
  2. "Gujarat: Amended agricultural varsity bill gives more power to state government". Ritu Sharma. The Indian Express. 28 July 2019. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.