பகாத்தனி தொடர்பெருக்கம்
எண் கோட்பாட்டில், பகாத்தனி தொடர்பெருக்கம் (primorial) என்பது தொடர்பெருக்கத்தைப் போன்றே இயல் எண்கள் கணத்திலிருந்து இயல் எண்கள் கணத்திற்கு வரையறுக்கப்படும் ஒரு சார்பு, ஆனால் தொடர்பெருக்கத்தில் நேர் முழு எண்கள் பெருக்கப்படுகின்றன; பகாத்தனி தொடர்பெருக்கத்தில் பகா எண்கள் பெருக்கப்படுகின்றன.
வரையறை
தொகுபகா எண்களுக்கு
தொகுn வது பகாஎண் pn இன் பகாத்தனி தொடர்பெருக்கம் pn# என்பது முதல் n பகாஎண்களின் பெருக்கமாக வரையறுக்கப்படுகிறது:[1][2]
இங்கு pk என்பது k -வது பகாஎண்.
எடுத்துக்காட்டாக:
முதல் ஆறு பகாத்தனி தொடர்பெருக்கங்கள்:
- 1, 2, 6, 30, 210, 2310.
(இதில் p0# = 1 என வெற்றுப் பெருக்கமாகக் கொள்ளப்படுகிறது.)
இயல் எண்களுக்கு
தொகுபொதுவாக ஏதேனுமொரு இயல் எண்ணிற்குப் பகாத்தனி தொடர்பெருக்கம் கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:
ஒரு நேர் முழு எண் n இன் பகாத்தனி தொடர்பெருக்கம் n# என்பது n -ஐ விடச்சிறிய பகாஎண்களின் பெருக்கமாக வரையறுக்கப்படுகிறது:[1][3]
இங்கு, எனக் குறிக்கப்படும் பகாத்தனி-எண்ணும் சார்பு (OEIS-இல் வரிசை A000720) , n -ஐ விடச்சிறிய பகாஎண்களைத் தருகிறது.
இவ்வரையறை கீழுள்ள வரையறைக்கு ஈடானதாகும்:
எடுத்துக்காட்டாக, 12# என்பது 12க்கும் குறைந்த பகாஎண்களின் பெருக்குத் தொகையாகும்:
அட்டவணை
தொகுn | n# | pn | pn# |
---|---|---|---|
0 | 1 | பகாஎண் இல்லை | 1 |
1 | 1 | 2 | 2 |
2 | 2 | 3 | 6 |
3 | 6 | 5 | 30 |
4 | 6 | 7 | 210 |
5 | 30 | 11 | 2310 |
6 | 30 | 13 | 30030 |
7 | 210 | 17 | 510510 |
8 | 210 | 19 | 9699690 |
9 | 210 | 23 | 223092870 |
10 | 210 | 29 | 6469693230 |
11 | 2310 | 31 | 200560490130 |
12 | 2310 | 37 | 7420738134810 |
13 | 30030 | 41 | 304250263527210 |
14 | 30030 | 43 | 13082761331670030 |
15 | 30030 | 47 | 614889782588491410 |
16 | 30030 | 53 | 32589158477190044730 |
17 | 510510 | 59 | 1922760350154212639070 |
18 | 510510 | 61 | 117288381359406970983270 |
19 | 9699690 | 67 | 7858321551080267055879090 |
20 | 9699690 | 71 | 557940830126698960967415390 |
மேற்கோள்கள்
தொகு- Harvey Dubner, "Factorial and primorial primes". J. Recr. Math., 19, 197–203, 1987.